Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாக்.. நடுரோட்டில் வைத்து தள்ளுவண்டி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவர் செயலால் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் வயதான பெண் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    ஷாக்.. நடுரோட்டில் வைத்து தள்ளுவண்டி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவர் செயலால் அதிர்ச்சி

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் மருத்துவர் ஒருவரும் அவரது ஊழியர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

    இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

     வயதான பெண்ணை தாக்கும் ஷாக் வீடியோ

    வயதான பெண்ணை தாக்கும் ஷாக் வீடியோ

    மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் 4, 5 ஆண்டுகள் வயதான பெண்ணைத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதில் அப்பெண்ணைத் தாக்கும் நபர்களில் ஒருவர் மருத்துவர் என்பதால் பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மருத்துவர் ஒருவரே பொது இடத்தில் இது போல நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ளத்தக்கது இல்லை என்றும் இது தொடர்பாக மருத்துவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

     என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை மாலை பன்வர்குவான் பகுதியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. மருத்துவரும் அவருடன் இருந்த ஆண்களும் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் அந்த பெண்ணை தாக்கி, வண்டியையும் கவிழ்த்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோவில் கொடூரமாகத் தாக்கப்படும் இருவர் பன்வர்குவான் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் துவாரகா பாய் மற்றும் அவரது மகன் ராஜு எனக் கூறப்படுகிறது.

     மருத்துவர் அடாவடி

    மருத்துவர் அடாவடி

    தங்கள் காய்கறி உள்ள தள்ளுவண்டிக்கு முன்னால் நிறுத்தியிருந்த காரை நகர்த்துமாறு அந்த மருத்துவரிடம் அந்தப் பெண் கூறியுள்ளார். இந்த வாக்குவாதத்தில் கோபமடைந்த மருத்துவர், தனது கிளினிக்கிற்கு கால் செய்து ஊழியர்களை வர வைத்துள்ளார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து தாயையும் மகனையும் தாக்கியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். மேலும், அத்துடன் நிற்காமல் அவர்களின் தள்ளுவண்டியையே அப்படியே கவிழ்த்தும் போட்டுள்ளனர்.

     தொடரும் சம்பவங்கள்

    தொடரும் சம்பவங்கள்

    இந்தச் சம்பவத்தால் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்த அவர்கள் கதறும் வீடியோவும் பரவும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதுபோன்ற எளிய மக்கள் மீதான தாக்குதல் என்பது கடந்த சில காலமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், போபாலில் தள்ளுவண்டி வியாபாரியின் காய்கறிகளைப் பெண் ஒருவர் நடுரோட்டில் கொட்டி சேதப்படுத்தி இருந்தார்.

     நடவடிக்கை தேவை

    நடவடிக்கை தேவை

    இது போன்ற தாக்குதல்களுக்குப் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதாலேயே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாகப் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே, பொது இடங்களில் இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடும் நபர்கள் மீது அவர்களின் பின்புலம் குறித்து எல்லாம் ஆராயாமல் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்து வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+