கோஹ்லிக்கு வாழ்நாள் தடை...கிரிக்கெட் வீரர்கள் மீது முட்டை, தக்காளி வீசுங்க...நடிகர் கமால் ரஷீத்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோஹ்லிக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகர் கமால் ரஷீத் கான் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் சாம்பியன் டிராபி 2017 நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் இறுதி போட்டியில் மோதின. 10 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தானுடன் இந்தியா மோதியதால் ரசிகர்கள் பாகிஸ்தானை வென்றே ஆக வேண்டும் என்று விரும்பினர்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி சூப்பராக விளையாடி ரன்களை குவித்தது. 27 ஓவர்களை விக்கெட்டை இழக்காமல் அதிரடியாகவும், வெற்றி என்ற இலக்கை நோக்கியும் விளையாடியது. அதிலும் பகார் சமாரின் ஆட்டம் மிகவும் அருமையாக இருந்தது.

 இந்தியா ஈடுகொடுக்கும்

இந்தியா ஈடுகொடுக்கும்

பீல்டிங்கில் இந்தியா கோட்டை விட்டாலும் பேட்டிங்கில் பட்டைய கிளப்பும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கிடந்தனர். ஆனால் முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட் விழுந்தது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்து கோஹ்லி, டோனி, யுவராஜ் சிங் உள்ளிட்டோர் அவுட் ஆகினர்.

 ரசிகர்ள் நம்பிக்கை இழப்பு

ரசிகர்ள் நம்பிக்கை இழப்பு

அத்துடன் ரசிகர்கள் நம்பிக்கையை இழந்தனர். அடுத்து களமிறங்கிய பான்ட்யா நிலைத்து நின்று ஆடி 76 ரன்களை குவித்தார். எனினும் ஜடேஜாவின் சுயநலத்தால் அவரும் அவுட் ஆகிவிட்டார். அவர் இ்ல்லையென்றால் 158 ரன்களை குவித்திருப்போமா என்பது சந்தேகமே.

 கோஹ்லி வெறும் 5 ரன்கள்

கோஹ்லி வெறும் 5 ரன்கள்

கேப்டன் கோஹ்லியோ வெறும் 5 ரன்களை மட்டுமே எடுத்து முகமது அமீரால் ஆட்டம் இழந்தார். இந்தியாவின் மோசமான விளையாட்டு குறித்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாலிவுட் நடிகர் கமால் கான் தனது அதிருப்தியை தொடர் டுவீட்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

வாழ்நாள் தடை

5 ரன்கள் எடுத்து அவுட் ஆகியுள்ள கேப்டன் விராட் கோஹ்லிக்கு கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். மேலும் 130 கோடி இந்தியர்களை முட்டாள் ஆக்கிவிட்டார். அவரை சிறையில் தள்ள வேண்டும் என்று கமால் கான் டுவீட்டியுள்ளார்.

அனைவருக்கும் தடை

கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அனைத்து வீரர்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். இந்தியர்களின் மானத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டனர் என்று கமால் மற்றொரு டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பிசிசிஐ அங்கீகாரத்தை ரத்து...

130 கோடி இந்தியர்களை இதுபோன்ற வீரர்களை கொண்டு முட்டாளாக்கியதற்காகவும், மேட்சு பிக்ஸிங்கால் கோடிக்கணக்கில் பணம் ஈட்டியதற்காகவும் பிசிசிஐ-யின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

முட்டை வீசுங்கள்

லண்டனில் இருந்து திரும்பி விமான நிலையத்துக்கு வரும் இந்திய வீரர்கள் மீது முட்டைகளையும், தக்காளிகளையும் வீச வேண்டும். ஏனென்றால் அவர்கள் உண்மையான தேசதுரோகிகள். இந்தியாவை விற்று விட்டனர்.

மேட்ச் பிக்ஸர்ஸ்

விராட் கோலி, யுவராஜ் சிங், டோனி ஆகியோர் மேட்ச் பிக்ஸர்கள். எனவே அவர்கள் மக்களை முட்டாளாக்குவதை நிறுத்த வேண்டும். கொஞ்சமாவது மானம் இருந்தால் நீங்கள் உடனடியாக விளையாட்டிலிருந்து விலக வேண்டும் என்று டுவீட்டியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Bollywood actor Kamaal Rashid Khan posted some aggressive tweets about Indian team and went on to say that Virat Kohli should be banned from playing the game for life.
Please Wait while comments are loading...