For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக சர்க்கரை நோய் தினம்: பெங்களூரில் 13ம் தேதி வாக்கத்தான்!

By Karthikeyan
Google Oneindia Tamil News

பெங்களூர்: உலக சர்க்கரை நோயாளிகள் தினம் மற்றும் குழந்தைகள் தினத்தையொட்டி பெங்களூரில் வரும் 13ந் தேதி வாக்கத்தான் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே நவம்பர் 14ம் தேதி சர்வதேச சர்க்கரை நோய் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சிவஜோதி என்ற அமைப்பினர் சார்பில் வாக்கத்தான் (Walkathon) ஓட்டம் நவம்பர் 13 ந் தேதி காலை 8.30 மணிக்கு பெங்களூரு கப்பன் பூங்காவில் துவங்குகிறது.

 Walkathon at Bengaluru on World Diabetes day

பொதுமக்கள் மத்தியில் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், குழந்தைகளிடையே சர்க்கரை நோய் அதிகரித்து வருவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

டைப் 1 ரக சர்க்கரை நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சிக்கு சிவஜோதி அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் நடைபயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனநலம் மற்றும் உடல்நலம் ஆகியவற்றிற்கு நடைபறிச்சி உறுதுணையாக இருப்பதால் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவர்கள் ராகேஷ் என்பவரை இந்த எண்களில் தொடர்பு கொள்ளவும். 9538924319, 9900587724, 8123765840 மற்றும் 9591174659.

English summary
On the eve of World Diabetes Day and Children's Day, a walkathon has been organised. Shivajoyti, has called this event, "Wake UP and Walk for Children for Diabates." The event will held at the Cubbon Park, Bengaluru on November 13th at 8.30 AM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X