டோக்லாம் விவகாரத்துக்கு போர் தீர்வு அல்ல: ராஜ்யசபாவில் சுஷ்மா ஸ்வராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டோக்லாம் விவகாரத்துக்கு போர் தீர்வு அல்ல என்று ராஜ்யசபாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பூடானின் டோக்லாமை கைப்பற்றும் நோக்கில் சீனா சாலைகள் அமைத்தது. ஆனால் இந்திய வீரர்கள் இதனைத் தடுத்து நிறுத்தினர்.

War not a solution, says Sushma Swaraj

இதனால் டோக்லாம் பீடபூமியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. டோக்லாமை சீனா கைப்பற்றிவிட்டால் வடகிழக்கு மாநிலங்களுக்கு பேராபத்து ஏற்படும் என்பதால் ராணுவம் அங்கு குவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபாவில் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், சீனாவுடன் ராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் சீனாவின் தூதரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசியது ஏன்?

நமது ராணுவம் வலிமையானதுதான். நாம் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புகிறோம். இருதரப்பும் ஒப்புக் கொள்ளக் கூடிய தீர்வை எட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
External Affairs Minister Sushma Swaraj said that war did not resolve Doklam issue and were followed by a round of dialogue.
Please Wait while comments are loading...