4 தேர்தலில் வெற்றிக்கு உதவினோம்.. பாஜக பற்றி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா திடுக்கிடும் தகவல்!
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Recommended Video

சென்னை: கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடு செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜகவிற்கும் இந்த நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பிரச்சனை இப்போது பெரிதாகி இருக்கிறது. பலரும் பேஸ்புக் பாதுகாப்பானது இல்லை என்று குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.

பாஜக வைத்த குற்றச்சாட்டு
இந்த முறைகேட்டில் முதலில் பாஜக கட்சிதான் காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைத்தது. அதன்படி ராகுல் காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தை பிரபலப்படுத்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் உதவியை நாடினார் என்று குறிப்பிட்டது. பொய்யான புகழை அதன் மூலம் ராகுல் பெற்றார் என்றும் குற்றச்சாட்டு வைத்தது.

பாஜக செய்த முறைகேடு
ஆனால் இந்த முறைகேட்டில் பாஜக கட்சிதான் முக்கிய பங்கு வகித்து இருக்கிறது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்திய கிளையான 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' என்ற நிறுவனத்துடன் பாஜக கட்சிதான் தொடர்பில் இருந்துள்ளது. இதை 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் இந்திய சிஇஓ ஒப்புக்கொண்டதும் பெரிய பிரச்சனை ஆகியுள்ளது.

ஒரே பிரதமர்
அமெரிக்காவில் இருக்கும் பேஸ்புக் தலைமையகம் சென்ற ஒரே பிரதமர் பாஜகவை சேர்ந்த மோடி மட்டுமே. 2014 தேர்தலில் உதவியதற்கான நன்றிக் கடன்தான் இந்த சந்திப்பு என்று காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. மேலும் இதில் நிறைய பணம் கைமாறி இருக்கலாம் என்றும் காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
|
தகவல் இருக்கிறது
இதே சமயத்தில் 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனத்தின் 'லிங்க்டின்' பக்கத்தில் முக்கியமான தகவல் இருக்கிறது. அதில் நான்கு வெவ்வேறு தேர்தல்களில் பாஜக கட்சிக்காக நாங்கள் உதவி செய்தோம். அதன் மூலம் பாஜக கட்சி வெற்றி பெற்றது என்று அந்த நிறுவனம் வெளிப்படையாக குறிப்பிட்டு இருக்கிறது.

பாஜக என்ன செய்தது
இந்த 'ஓவலேனோ பிசினஸ் இண்டலிஜென்ஸ்' நிறுவனம் மூலம் பாஜக இந்தியா முழுக்க பொய்யான செய்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது. மேலும் பொய்யான புள்ளி விவரங்களை கொடுத்து மக்களின் மனநிலையை மாற்றி உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிறுவனத்துடன் ராஜ்நாத் சிங்தான் அதிக நெருக்கமாக இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications