நமக்கு ஹைவேஸும், ஐ வேஸும் தேவை: குஜராத் மாநாட்டில் மோடி பேச்சு
அகமதாபாத்: நமக்கு ஹைவேஸும், ஐ வேஸும் தேவை என்று எழுச்சிமிகு குஜராத் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் எழுச்சிமிகு குஜராத் மாநாட்டை இன்று பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி, தொழில் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பேசிய மோடி கூறுகையில்,

பிரான்ஸ்
பிரான்ஸில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதல்களில் பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலக வங்கி
இந்த மாநாடு தான் உலகிலேயே மிகப்பெரியது என்று கூறலாம். இங்கு தான் வளர்ந்து வரும் தொழில் அதிபர் கூட உலக வங்கியின் தலைவரை பார்க்க முடியும். இளம் விவசாயி ஐ.நா. பொதுச் செயலாளர் உணவு பாதுகாப்பு உள்ளிட்டவை பற்றி பேசுவதை கேட்க முடியும்.

பொருளாதாரம்
நாம் இங்கு குடும்பமாக கூடியிருக்கிறோம். இந்த உலகம் வாழ சிறந்த இடமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். நான் இந்தியாவின் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளேன். இன்றைய முக்கியமான விஷயம் உலக பொருளாதாரம் தான். பொருளாதாரம் நிலையாக இருக்க, மீண்டு வர நாம் தான் புதிய வழிகளை கண்டறிய வேண்டும்.

பிரச்சனை
நம்பிக்கை ஏற்படுத்த என் அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவுடன் பணிபுரிய பல நாடுகள் முன்வருகின்றன. பிரச்சனைகளை அணுகும் முறையை நாம் மாற்ற வேண்டும்.

ஜனநாயகம்
நம் நாட்டில் அண்மையில் நடந்த பொது தேர்தல் ஜனநாயகத்தில் புது திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக நிலையை மாற்றி, மேம்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது.

அரசு
என் அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 4 மாதங்களில் 100 மில்லியனுக்கும் அதிகமான வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு
பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உழைக்க நம்மிடையே ஏராளமான கைகள் உண்டு. அதைவிட நனவாக்க வேண்டிய கனவுகள் அதிகம் உள்ளது. நாம் பெரிய கனவுகள் கண்டு வருகிறோம்.

ஐ வேஸ்
நமக்கு ஹைவேஸ் மற்றும் ஐ வேஸ் ஆகியவை தேவை. நான் ஐ வேஸ் என்று கூறுவது இன்பர்மேஷன்(தகவல்) வேஸ்.

இந்தியா
இந்தியா வேகமாக மாறி வருகிறது. இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா வேகமாக கற்று வருகிறது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முன்னேற்றம், அமைதிக்காக பாடுபடுவோம் என்றார் மோடி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications