For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என் அரசு செயல்பாடுகளில் தலையிட்டால் நகத்தை இழுத்து வைத்து வெட்டிவிடுவேன்... திரிபுரா முதல்வர்

என் அரசின் செயல்பாடுகளில் தலையிட்டால் நகத்தை இழுத்து வைத்து வெட்டிவிடுவேன் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேவ் தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: எனது அரசின் செயல்பாடுகளில் யாரேனும் தலையிட்டால் விரலை இழுத்து வைத்து நகத்தை வெட்டிவிடுவேன் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேவ் தெரிவித்தார்.

திரிபுரா மாநிலத்தின் முதல்வராக அண்மையில் பொறுப்பேற்றவர் பிப்லாப் தேவ். இவர் அரசு வேலைக்கு பதில் இளைஞர்கள் பீடா கடை போட்டு பிழைத்துக் கொள்ளலாம் இல்லையென்றால் மாடு மேய்க்கலாம் என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

பிப்லாப்புக்கு அழைப்பு

பிப்லாப்புக்கு அழைப்பு

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளையே பாஜக பிரமுகர்கள் கூறிவருகின்றனர். இதுபோன்ற கருத்துகளை கூறியதற்காக பிரதமர் மோடி நாளை தன்னை சந்திக்குமாறு பிப்லாப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சுரைக்காய்

சுரைக்காய்

இந்நிலையில் இன்று தனியார் தொலைகாட்சி சேனலுக்கு பிப்லாப் தேவ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் காலை 8 மணிக்கு ஒரு காய்கறி கடைக்காரர் சுரைக்காய் வாங்கி வருகிறார்.

யார் தலையீடும் கூடாது

யார் தலையீடும் கூடாது

அந்த காய்களை வாங்க வந்தவர்கள் அங்கிருந்த சுரைக்காயை அழுத்தி அழுத்தி பார்த்துவிட்டு வாங்காமல் சென்றதால் அந்த காய் 9 மணிஅளவில் அழுகிவிடுகிறது. இதுபோல் எனது அரசில் நடக்கக் கூடாது. என் அரசில் யார் தலையீடும் இருக்க கூடாது.

மக்கள் அதிர்ச்சி

மக்கள் அதிர்ச்சி

என் அரசின் செயல்பாடுகளில் யாரேனும் தலையிட்டாலோ அல்லது விமர்சனம் செய்தாலோ அவர்களின் விரலை இழுத்து வைத்து நகத்தை வெட்டிவிடுவேன். என் அரசை யாரும் தொட்டு பார்க்கக் கூட கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதல்வர் இதுபோல் கையை வெட்டுவேன், நகத்தை வெட்டுவேன் என்று சொல்வதை கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
After series of bizarre statements, Tripura CM Biplab Kumar Deb was seen issuing a brazen threat to those taking on his government. The Tripura CM was be seen saying that if anyone interferes in his government or pokes at it, he would chop their nails off.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X