4வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சி தான்.. பாஜகவால் தொடக்கூட முடியாது.. CNN - News 18 கருத்து கணிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மீண்டும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான் தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும், பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்று சிஎன்என் - நியூஸ் 18 கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார்.
தமிழகத்தை போல் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

294 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி ஏப்ரல் 23ல் முதற்கட்டமாகவும், ஏப்ரல் 29ல் இரண்டாம் கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு தமிழகத்தை போல் மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
3 முனை போட்டி
மேற்கு வங்கத்தில் 3 முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக கூட்டணி மற்றும் கம்யூனிஸ்ட் - காங்கிரஸ் கூட்டணி இடையே போட்டி உள்ளது. இந்நிலையில் தான் மேற்கு வங்க தேர்தலில் வெல்லப்போவது யார்? என்பது பற்றி சிஎன்என் - நியூஸ் 18 நிறுவனம் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பை நடத்தியது. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
மம்தா பானர்ஜி மீண்டும் வெற்றி
அதில் தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான் ஜெயிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம்முள்ள 294 சட்டசபை தொகுதிகளில் தனி மெஜாரிட்டிக்கு 148 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் திரிணாமுல் காங்கரிஸ் கட்சி குறைந்தபட்சம் 184 முதல் 194 இடங்களில் வெல்லும் என்று இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4வது முறையாக மம்தா ஆட்சி்
இதன்மூலம் மீண்டும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தான் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 41.9 சதவீதம் வரை ஓட்டுகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2011 சட்டசபை தேர்தல் முதல் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். 2011, 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் அவர் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்ற நிலையில் இப்போது தொடர்ந்து 4வது முறையாக வெல்வார் என்று இந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு பின்னடைவு
மாறாக மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ள பாஜகவுக்கு குறைந்த சீட்டுகளே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக குறைந்தபட்சமாக 98 முதல் 108 தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் ஓட்டு சதவீதம் 34.9 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் - கம்யூனிஸ்ட்
அதேவேளையில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகள் பெரிய அளவில் சோபிக்காது. குறைந்த எண்ணிக்கையில் அந்த கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மேற்கு வங்கத்தை சுமார் 33 ஆண்டுகளாக ஆண்ட கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் துடைத்தெறியப்பட்டு இருப்பதை இந்த கருத்து கணிப்பு வெளிப்படுத்தி உள்ளது.
-
கல்லூரியில் ரகசிய பெட் ரூம்கள்.. உள்ளே பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறைகள்! கூடவே கைத்துப்பாக்கி வேற! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications