For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்களுக்கு 'பாஸ்சிம் போங்கோ' எங்க இருக்குன்னு தெரியுமா??

Google Oneindia Tamil News

west bengal
கொல்கத்தா: மேற்கு வங்கத்துக்கு என்ன பெயர் வைப்பது என்பதில் நீடித்து வந்த குழப்பம் தற்போது ஒரு வழியாக தீர்ந்துள்ளது. கட்டக் கடைசியாக அந்த மாநிலத்தின் பெயரா பாஸ்சிம் போங்கோ என்று மாற்ற தீர்மானமாகியுள்ளதாம்.

மேற்கு வங்க மாநிலம் ஆங்கிலத்தில் வெஸ்ட் பெங்கால் என்று குறிப்பிடப்படுகிறது. இதனால் ராசிப்படியும், அகரவரிசைப்படியும் தங்களது மாநிலத்தின் பெயர் கடைசியாக வருவதாக பலரும் குறைப்பட்டுக் கொண்டனர்.

இதையடுத்து ஒரு படத்தில் வடிவேலு சொல்வாரா.. நம்ம தமிழ்நாட்டைத் தூக்கிட்டுப் போய் டெல்லி பக்கத்துல வச்சுட்டா.. அம்புட்டும் நமக்கு வரும், மிச்சத்தை மத்தவங்களுக்குக் கொடுக்கலாம் என்று.. அதே மாதிரி, மேற்கு வங்கத்தின் பெயரையும் பாஸ்சின் பங்கா என்று மாற்றினால் ஆங்கில அகரவரிசையில் நமது மாநிலத்தின் பெயரும் முன்னுக்கு வந்து விடும் என்று கோரிக்கைகள் கிளம்பின.

ஆனால் இது சரியாக இல்லை என்று கருத்துக்கள் கிளம்பின. இதையடுத்து மறுபடியும் தீவிர ஆலோசனைகள், யோசனைகள் வரவேற்கப்பட்டன. அதன் இறுதியில் தற்போது பெயரை பாஸ்சிம் போங்கோ Paschim Bongo என்று மாற்றியுள்ளனர்.

இனிமேல் மேற்கு வங்கத்தின் பெயர் பெங்காலியிலும், ஆங்கிலத்திலும் Paschim Bongo. என்றுதான் அழைக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. இதை அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளனர்.

English summary
The West Bengal government has announced that the state's name has been changed to Paschim Bongo.The state will be called Paschim Bongo in English also.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X