For Daily Alerts
காவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்திலேயே தமிழக அரசுக்கு வெற்றி!

தமிழகத்திற்கு இந்த மாதம் 34 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும்- வீடியோ
டெல்லி: காவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்திலேயே தமிழக அரசுக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
முதல் காவிரி ஆணைய கூட்டம் தற்போது டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

தமிழக பிரதிநிதியான பொதுப்பணி முதன்மை செயலாளர் பிரபாகர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.மேலும் திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் தமிழக அரசு மிக முக்கியமான சில கோரிக்கைகளை வைத்தது. காவிரியில் பல முக்கியமான பிரச்சனைகள் குறித்து தமிழக அரசு இந்த கூட்டத்தில் முறையிட்டது.
- கடந்த மாதம் போலவே கர்நாடக அரசு தொடர்ந்து நீர் திறக்க ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தியது. கடந்த மாதம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளால் கனமழை பெய்ததால் சரியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதை இந்த மாதமும் பின்பற்ற கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீர் வரத்து முறையாக கண்காணிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
- காவிரி ஆணையத்திற்கு எதிராக கர்நாடகா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளது. ஆனால் முறைப்படி கர்நாடகா இப்படி வழக்கு தொடுக்க முடியாது. இதை பற்றியும் காவிரி ஆணைய கூட்டத்தில் புகார் வைக்கப்பட்டுள்ளது.
- ஜூலை-ஆகஸ்ட்டில் 80 டிஎம்சி நீரை கர்நாடகா திறக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஜூலை மாதம் 31.24 டிஎம்சி திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படியே ஜூலை மாதத்திற்கு மொத்தம் 31.24 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.
- மேலும் இதில் ஆகஸ்டில் மட்டும் 50 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த மாதங்களில் காவிரியில் கர்நாடக குறைவாக கொடுத்த நீரையும் சேர்த்து அடுத்த மாதம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்தும் அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- அடுத்த காவிரி ஆணைய கூட்டம் இந்த மாத இறுதியில் கூட உள்ளது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!