ஒய்ட்னி ஹூஸ்டனும், ஸ்ரீதேவியும்.. மரணத்தில் எத்தனை ஒற்றுமை பாருங்கள்!
Recommended Video

டெல்லி: அமெரிக்க பாப் பாடகி ஒய்ட்னி ஹூஸ்டன் மரணத்திற்கும், நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இயற்கையான மரணமாக இருக்கலாம் என்ற போதிலும் கூட அவர் மரணமடைவதற்கான சூழல் எப்படி ஏற்பட்டது என்பதில் குழப்பம் நிலவுகிறது.
இந்த நிலையில் பாப் பாடகி ஹூஸ்டனின் மரணத்திற்கும், ஸ்ரீதேவி மரணத்திற்கும் இடையே சில ஒற்றுமைகளைக் காண முடிகிறது.

ஒய்ட்னி மரணம்
2012ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி மரணமடைந்தார் ஒய்ட்னி. நீர் நிரப்பப்பட்ட பாத்டப்பில் மூழ்கிய நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார் ஒய்ட்னி. தற்செயலாக நீரில் மூழ்கி ஒய்ட்னி இறந்ததாக பின்னர் தடவியல் சோதனையில் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீதேவியும் அதே பாணியில்
கிட்டத்தட்ட ஸ்ரீதேவியும் அதே பாணியில் மரணமடைந்துள்ளார். அதே மாதம், அதாவது பிப்ரவரியிலேயே ஸ்ரீதேவியின் மரணமும் நிகழ்ந்துள்ளது. ஸ்ரீதேவியும் நீர் நிரப்பிய பாத் டப்பில் மூழ்கியுள்ளார். ஸ்ரீதேவியும் தற்செயலாக மரணமடைந்துள்ளதாக தடவியல் சோதனை கூறுகிறது.

மரண சூழலில் குழப்பம்
இருவரது மரணத்திலும் கூட சூழல்கள்தான் குழப்பமாக உள்ளது. அதாவது ஒய்ட்னி எப்படி பாத்டப்பில் மூழ்கினார் என்பது தெரியவில்லை. அதேபோலத்தான் ஸ்ரீதேவி மூழ்கியதிலும் குழப்பம் நிலவுகிறது.

காலம்தான் பதில் சொல்லனும்
ஸ்ரீதேவி மரணத்தின் காரணம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. போதை நிரம்பி வழியும் அளவுக்கா அவர் மது அருந்தியிருப்பார் என்று அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications