எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக இருக்கலாமா?... பார் கவுன்சில் அதிரடி நோட்டிஸ்!
எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணி செய்வது சரியா என்று பார் கவுன்சில் கேள்வி எழுப்பி இருக்கிறது.
டெல்லி: எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணி செய்வது சரியா என்று பார் கவுன்சில் கேள்வி எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து வழக்கறிஞர்களாக இருக்கும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு பார் கவுன்சில் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது.
இந்தியாவில் இருக்கும் சில எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணி செய்து வருகின்றனர். மேலும் இதில் சிலர் மிகவும் முக்கியமான வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் பெரிய வழக்குகளில் இவர்கள் ஆஜராவது வழக்கம்.

இந்த நிலையில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் பார் கவுன்சிலிடம் அளித்த மனுவில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக பணி செய்வது குறித்து விளக்கம் கேட்டு இருந்தார். எம்.பி, எம்.எல்.ஏக்கள் மக்கள் பணி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதற்காகத்தான் அவர்களுக்கு அரசு சம்பளமும் தரப்படுகிறது.
இப்படி அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு இன்னொரு பணி செய்வது சரியா என்று கேட்டு இருந்தார். எம்.பி, எம்.எல்.ஏக்கள் இரட்டை குதிரையில் பயணிக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
உச்ச நீதிமன்றத்தையும் சேர்த்து இதுபோல 500க்கும் அதிகமான எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். தற்போது அவர்கள் அனைவருக்கும் பார் கவுன்சில் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து வரும் 21ம் தேதி நடக்கும் பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருக்கிறது. அதேபோல் வேறு இடங்களில் மாத சம்பளம் வாங்கிக் கொண்டு வழக்கறிஞராக இருப்பதும் பார் கவுன்சில் விதிக்குள் வருமா என்றும் விவாதிக்கப்பட உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications