For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் 2018.. அப்போது வீதியில் போராடவிட்டு ஏளனம்.. இப்போது தேர்தலுக்காக விவசாயிகளிடம் சமாதானம்

இந்த வருட பட்ஜெட்டில் விவசாயத்திக்ரு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய பட்ஜெட் 2018-விவசாயத் துறை- வீடியோ

    டெல்லி: இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடந்தது. 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். இதற்கு பின் அடுத்த வருடம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.

    அதேபோல் சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட்டும் இதுதான். மேலும் இதனுடன் ரெயில்வே பட்ஜெட்டும் ஒன்றாக தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

    விவசாயிகள்

    விவசாயிகள்

    இதில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 2018-19-ம் ஆண்டுக்கான விவசாயக் கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூங்கில் வளர்ப்பை ஊக்கப்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

    அப்போது

    அப்போது

    ஆனால் இதே விவசாயிகள் அப்போது டெல்லியில் போராடிய போது மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது. பேச்சு வார்த்தை நடத்த கூட யாரும் முன்வரவில்லை. அவர்களின் போராட்ட கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

    தேசிய அவமானம்

    தேசிய அவமானம்

    உலக ஊடகங்கள் எல்லாம் அங்கே படையெடுத்தும் கூட எதுவும் நடக்கவில்லை. விவசாயிகள் டெல்லி தெருக்களில் நாடாளுமன்ற முன்பும், ராஜவீதியிலும் நிர்வாணமாக நடந்தும் ஒரு பயனும் இல்லை. தேசிய அவமானமாக நடந்த நிகழ்விற்கு எந்த நடவடிக்கையும் இல்லை.

    நீலிக்கண்ணீர் பட்ஜெட்

    நீலிக்கண்ணீர் பட்ஜெட்

    இந்த நிலையில் தற்போது மத்திய அரசு நீலிக்கண்ணீர் வடித்து இருக்கிறது. விவசாயிகளை எப்படியாவது சமாதானப்படுத்த வேண்டும் என்று சில திட்டங்களை அறிவித்துள்ளது. அது போல் கடன்தொகையை அதிகரித்துள்ளது.

    உண்மை என்ன

    உண்மை என்ன

    ஆனால் உண்மையில் இந்த பட்ஜெட் தேர்தலை குறிவைத்து வந்தது பட்டவர்தனமாக தெரிகிறது. விவசாயிகளுக்கு (வடஇந்திய) புரிய வேண்டும் என்பதற்காகவே நிதி அமைச்சர் இந்தியில் பேசியதையும் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் மூங்கிலுக்கு ஒதுக்கீடு கொடுத்து வடகிழக்கு தேர்தலில் வெற்றிபெற முயற்சிப்பதும் புரிந்துகொள்ள முடிகிறது.

    English summary
    FM gives importance to agriculture in this Budget 2018. Few months ago while farmers protesting for their life, the central government ignored them purposely.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X