சின்னப்புள்ளதனமால்ல இருக்கு.. தமிழ் படங்களோட விளையாடுறதே இவிங்களுக்கு பொழப்பா போச்சு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழ் திரைப்பட ரிலீஸ் நேரத்தில் காவிரி பிரச்சினையை பேசுவது கன்னட அமைப்புகளுக்கு தொடர் கதையாக உள்ளது.

சினிமாவுடன் அரசியலை கலப்பது, காவிரியை கலப்பது என தொடர்ந்து இந்த அட்ராசிட்டி நடந்தும் இதற்கு கடிவாளம் போட எந்த ஆட்சியாளரும் முன்வரவில்லை என்பதுதான் அதிர்ச்சி.

ஒகேனக்கல் பிரச்சினையின்போது ரஜினிகாந்த் பேசியதற்காக குசேலன் படத்தை தடுத்து நிறுத்தியவர்கள் கன்னட அமைப்பினர். பாகுபலி-2 திரைப்படம் வெளியானபோது சத்யராஜை மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர். இதுவும் தண்ணீர் பிரச்சினைக்காகத்தான்.

Why Kannada organizations always targets Tamil films?

தமிழின் இவ்விரு முன்னணி நடிகர்களுமே மன்னிப்பு கேட்ட பிறகுதான் மேற்சொன்ன படங்கள் ரிலீஸ் ஆகின. பெங்களூரை உள்ளடக்கிய கர்நாடகா மார்க்கெட் என்பது சினிமா தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு முக்கியமான வருவாய் மையங்களில் ஒன்று என்பதுதான் நடிகர்கள் பலிகடா ஆக்கப்பட்டு படத்தை ரிலீஸ் செய்ய வைப்பதின் நோக்கமாகும்.

ருசி கண்ட பூனைகளை போல கன்னட அமைப்பினரும், ஒவ்வொரு முறை முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போதும், இதே பஞ்சாயத்தை செய்து வருகிறார்கள். தமிழ் முன்னணி நடிகர் படங்களுக்கு தியேட்டர்களுக்கு வரும் கூட்டத்தை பார்த்த கடுப்பு என்பதும் இதற்கு ஒரு காரணம்.

தமிழகத்திற்கும் பங்கு உள்ள காவிரி பற்றி தமிழ் நடிகர்கள் பேச கூட உரிமை இல்லை என்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குவது கன்னட அமைப்பினர் வேலையாக உள்ளது. இவர்கள் நடவடிக்கையை பார்க்கும்போது, அழுவதா, சிரிப்பதா என்பதை போன்ற உணர்வுதான் தமிழர்களுக்கு மேல் எழும்பும்.

Why Kannada organizations always targets Tamil films?

இப்போது கர்நாடக திரைப்பட வர்த்தகசபை காலா படத்திற்காக கூறியுள்ள ஒரு நிபந்தனையும், அப்படி சின்னப்புள்ளத்தனமானதுதான். காவிரி மேலாண்மை வாரியம் தேவை என கூறிய ரஜினிகாந்த், இப்போது அதையே மாற்றி, காவிரி மேலாண்மை வாரியம் கூடாது என்று கூற வேண்டுமாம். அப்படி கூறினால் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிப்பார்களாம்.

ரஜினிகாந்த் என்ன சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்ஜா? காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என்று அவர் கூறியதும், அப்படியே நடந்துவிடுமா? இந்த நிபந்தனைகள் எல்லாம் திரைப்படங்களில் வரும் காமெடி சீன்களை நினைவுபடுத்துகின்றன. கன்னட அமைப்பினரும், அவர்கள் கூறுவதை கேட்டு ஆடும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் காலம் காலமாக இந்த காமெடிகளைதான் அரங்கேற்றி வருகின்றன என்பதுதான் இதில் பெரும் கொடுமை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+