For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகத்துக்கு இரு துணை முதல்வர்கள்? பரமேஸ்வர் மற்றும் சிவசங்கரப்பாவுக்கு வாய்ப்பு?

கர்நாடகத்துக்கு இரு துணை முதல்வர்கள் பதவி ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    முக்கிய முடிவுகளை எடுக்க டெல்லி விரைந்த குமாரசாமி- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகத்துக்கு இரு துணை முதல்வர்கள் பதவி ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பதவிகளை தலித் மற்றும் லிங்காயத்துக்கு எம்எல்ஏக்களுக்கு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    கர்நாடகத்தில் ஜவ்வென இழுத்துக் கொண்டிருந்த யாருக்கு பெரும்பான்மை என்ற பிரச்சினை எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் முதல்வர் பதவியிலிருந்து விலகியவுடன் முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் இன்று குமாரசாமி, டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து பேசுகிறார்.

    குமாரசாமி பதவியேற்பு

    குமாரசாமி பதவியேற்பு

    கர்நாடக முதல்வராக நாளை மறுதினம் குமாரசாமி பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதற்கு முன்னர் தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    பரமேஸ்வர் தகவல்

    பரமேஸ்வர் தகவல்

    கர்நாடகத்தில் இரு துணை முதல்வர் பதவிகள் இருக்கும் என்று காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் பரமேஸ்வர் சூசகமாக தெரிவித்திருந்தார். அவற்றுள் ஒரு பதவி பரமேஸ்வருக்கும் மற்றும் பதவி லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த சிவசங்கரப்பாவுக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.

    வெற்றி பெற்றுவுடன்

    வெற்றி பெற்றுவுடன்

    நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி வெற்றி பெற்றவுடன் துணை முதல்வர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து குமாரசாமி கூறுகையில் நான் இன்று டெல்லிக்கு செல்கிறேன். அங்கு சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்திப்பேன்.

    முடிவு செய்யப்படும்

    முடிவு செய்யப்படும்

    காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவி என்பது முடிவு செய்யப்படும் என்றார். மே 12-ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தல் பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், ஜேடிஎஸ் 37 இடங்களிலும், இரு சுயேச்சைகள், ஒரு இடத்தில் பிஎஸ்பியும் வெற்றி பெற்றது.

    English summary
    Karnataka is likely to have two deputy chief minsters. The Congress is likely to push for a Dalit and Lingayat MLA for the two posts. This would be finalised at a meeting in Delhi after H D Kumaraswamy holds talks with Rahul and Sonia Gandhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X