கோவா தேர்தல் களத்துக்கு இன்னும் முன்னரே போயிருந்தால் விஸ்வரூபம் எடுத்திருப்போம்... மமதா பானர்ஜி
கொல்கத்தா: கோவா சட்டசபை தேர்தல் களத்துக்கு முன்கூட்டியே சென்றிருந்தால் கூடுதல் இடங்களைப் பெற்றிருப்போம் என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் மார்ச் 10-ந் தேதி எண்ணப்படுகின்றன. இந்த தேர்தல்கள் தொடர்பாக எக்ஸிட் போல் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன.

கோவாவில் தொங்கு சட்டசபை
கோவா, உத்தரகாண்ட், உ.பி, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் எக்ஸிட் போல் முடிவுகளில் கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் சில இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும்பான்மைக்கு தேவையான 21 இடங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் எக்ஸிட் போல் முடிவுகள் கூறியிருந்தன. இதனால் கோவாவில் தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கூட்டணி ஆட்சி
இதனையடுத்து கோவாவில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைப்பது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்துள்ளது. தற்போதைய நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தரும் கட்சியே ஆட்சி அமைக்க வாய்ப்பு பெறும் எனவும் தெரிகிறது. அதாவது முதன் முறையாக கோவா தேர்தல் களத்தை எதிர்கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்து நிற்கிறது.

அன்று காங். கோபம்
இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சியின் மாஜி தலைவர்களைத்தான் திரிணாமுல் காங்கிரஸ் கோவாவில் வளைத்துப் போட்டு தமது கட்சியை உருவாக்கியது. இதில் காங்கிரஸ் மிகவும் கோபமடைந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத் தலைவர்களுக்கும் மமதா பானர்ஜிக்கும் இடையே கருத்து மோதல்களும் வெடித்திருந்தன.

மமதா சொன்னது என்ன?
இந்நிலையில் கோவா எக்ஸிட் போல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மமதா பானர்ஜி, பரவாயில்லை.. இன்னமும் முன்கூட்டியே தேர்தல் களத்துக்கு நாங்கள் வந்திருந்தால் கூடுதல் இடங்களைப் பெற்றிருப்போம் என்றார். மேலும் திரிபுரா, பீகார், உ.பி., ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களிலும் திரிணாமுல் காங்கிரஸை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வோம். 2024-ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலை இலக்கு வைத்து எங்கள் நடவடிக்கைகள் தொடரும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications