ஹரியானாவில் பெண்களின் கூந்தல் மர்மமான முறையில் துண்டிப்பு.. பேய் பிசாசின் வேலையோ என அச்சம்!
ஹரியானாவில் பெண்களின் கூந்தல் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர்: ஹரியானாவில் பெண்களின் கூந்தல் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்வராக மனோகர் லால் கட்டார் உள்ளார்.
இந்நிலையில் இம்மாநிலத்தின் மேவாட் பகுதியில் உள்ள கிராமங்களில், பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெண்களின் கூந்தல் துண்டிப்பு
குறிப்பாக பெண்களின் முடிகள் மட்டுமே துண்டிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தங்களின் கூந்தல் மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டுள்ளதாக இதுவரை 15க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

பேய் வேலையா என அச்சம்
கூந்தல் துண்டிக்கப்படும் நேரத்தில் தாங்கள் சுயநினைவை இழந்து விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். பெண்களின் கூந்தல் துண்டிக்கப்படுவதற்கு பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவை காரணமா என்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

போலீஸார் குழப்பம்
கூந்தல் துண்டிக்கப்படுவதாக பெண்கள் அளித்து வரும் புகார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போலீசார் குழப்பமடைந்துள்ளனர். கூந்தல் திருடனை எப்படி பிடிப்பது என்றும் போலீசார் திணறி வருகின்றனர்.

சுயநினைவை இழக்கும் பெண்கள்
குர்கானில், கூந்தல் துண்டிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது வீட்டின் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சந்தேகத்திற்கிடமாக நின்றதாகவும் அவரை அங்கிருந்து கிளம்பும்படி கூறிய சற்று நேரத்தில் தான் சுயநினைவை இழந்ததாகவும் அவர் கூறினார். மேலும் விழித்து பார்த்தப்போது தனது முடி மாயமாகியிருந்ததாகவும் அவர் கூறினார்.

போலீஸ் விசாரணை
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கூந்தல் ஜவுரி முடி விற்பனையாளர்கள் யாரேனும் முடியை வெட்டுகின்றனரா அல்லது பில்லி சூனியத்துக்காக பெண்களின் முடி வெட்டப்படுகிறதா என விசாரித்து வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications