கணவனை எட்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்த பெண்ணுக்கு 30 வருட சிறை தண்டனை
கணவனை எட்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்த பெண்ணுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்.
சண்டிகர் : கணவனை எட்டு துண்டுகளாக வெட்டி கொலை செய்த பெண்ணிற்கு முப்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஹரியானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியில் வசித்து வந்தவர் பல்ஜித். இவரது மனைவி பூஜா. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாட்டால் சண்டை நடக்கும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சண்டையில், கோபமடைந்த பூஜா, தனது கணவர் பல்ஜித்தை கத்தியால் குத்தியும், உடலை எட்டு துண்டுகளாக வெட்டியும் கொலை செய்தார். பின்னர் தனது கணவரை காணவில்லை என்றும் நாடகமாடி உள்ளார்.

இதனையடுத்து பல்ஜித்தின் சகோதரர் குல்ஜித் தனது சகோதரரைக் காணவில்லை என்று போலீஸில் புகார் அளித்தார். மேலும், இதில் தனது அண்ணனின் மனைவி மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். விசாரணையில், பல்ஜித்தை அவரது மனைவி பூஜாவே கொலை செய்து எட்டு துண்டுகளாக வெட்டி வீட்டில் பல பகுதிகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வேறொருவரோடு ஏற்பட்ட கள்ளத்தொடர்பே இந்தக் கொலைக்கு காரணம் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பூஜாவிற்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து பூஜாவை போலீஸார் சிறையில் அடைத்தனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications