இன்பத்துக்கு இடையூறு இல்லாத மெல்லிய ஆணுறைகள் அவசியம்-டெல்லியில் பில்கேட்ஸ் பேட்டி
டெல்லி: அணிந்திருப்பதே தெரியாத அளவுக்கான மெல்லிய ஆணுறை தயாரிக்கப்பட்டால்தான் பாதுகாப்பான உடலுறவுக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்று தொழிலதிபர் பில்கேட்ஸ் தெரிவித்தார்.
உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் தனது மனைவி மலின்டாவுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்தியாவில் செயல்படுத்தப்படும் சுகாதார நல உதவிகளை மேற்பார்வையிட அவர் வந்துள்ளார். டெல்லியில் அவர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் ஈடுபட்டார்.

இந்நிலையில் நிருபர்களிடம் பில்கேட்ஸ் கூறியதாவது:
தற்போதுள்ள ஆணுறை தங்களது இன்பத்துக்கு இடைஞ்சலாக உள்ளதாக ஆண்களும், பெண்களும் கருதுகிறார்கள். எனவே ஆணுறை பயன்பாடு குறைவாக உள்ளது. எனவே அணிந்திருப்பதே தெரியாத அளவுக்கு மெல்லிய பொருளால் ஆணுறை உருவாக்கப்பட வேண்டும். அடுத்த ஆண்டில் இந்த முயற்சி சாத்தியப்படும் என்று நினைக்கிறேன். அதுதான் உலகிலேயே மிகவும் மெல்லிய ஆணுறையாக இருக்கப்போகிறது. இதுபோன்ற ஆணுறைகளை தயாரிக்க அதிகம் செலவுபிடிக்காமல் தயாரிப்பதுதான் சவாலான விஷயமாக உள்ளது.
நரேந்திரமோடி தலைமையிலான அரசின் திட்டங்களால் நான் மகிழ்ச்சியடைந்துள்ளேன். அதே நேரம் இந்தியாவில் இன்னும் அதிகமாக சுகாதாரத்துறையில் முதலீடு செய்யப்பட வேண்டியது அவசியமாகும். மோடி அரசின் குறிக்கோள்கள் நன்றாக உள்ளன. அதே நேரம் அதை செயல்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே. கவர்ச்சியில்லாத திட்டங்களையும் மக்களின் நலனுக்காக செய்ய வேண்டியது சில நேரங்களில் அவசியமாகிறது.
இந்தியாவில், குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. ஆனால் அதை சரி செய்யவும் இங்கு வாய்ப்பு அதிகம். இந்தியாவில் உள்ள நல்ல சாலை வசதிகள் மக்களை சென்றடையும் பணியை \எளிதாக்குகின்றன. ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டைப்போல, மருத்துவமனைக்கு வரவே பயப்படக்கூடிய நிலை இந்தியாவில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications