For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேஜ்ரிவால் பாணியில் ஜாமீன் கேட்க மறுப்பு! யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஜெயில்!!

Google Oneindia Tamil News

ஹாசரிபாக்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்வாரிய அதிகாரியை கட்டிப்போட சொன்ன வழக்கில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹாசரிபாக் பகுதியில் தடையற்ற மின்சாரம் வழங்கக் கோரி யஷ்வந்த் சின்ஹா தலைமையில் பாஜகவின் 300 பேர் நேற்று போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்ஹா, மின்சார வாரிய அதிகாரிகளின் கைகளை கயிற்றால் கட்டிப் போடுமாறு பாஜக பெண் தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.. ஏனெனில் அவர்களது குழந்தைகள்தான் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர் என்று கூறியிருந்தார்.

Yashwant Sinha sent to judicial custody in assault of a government official case

இதன் பின்னர் பாஜகவினரும் மின்வாரிய அதிகாரியை கட்டிப்போட்டு அவரது அறையில் வைத்து பூட்டினர். பின்னர் போலீசார் தலையிட்டு அவரை விடுவித்தனர்.

இதைத் தொடர்ந்து யஷ்வந்த் சின்ஹா மற்றும் 54 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டோர் இன்று ஹாசரிபாக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பாரதிய ஜனதாவினர் ஜாமீன் கோர விரும்பவில்லை என்று கூறிவிட்டனர். இதைத் தொடர்ந்து சின்ஹா உட்பட 54 பாஜகவினரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏற்கெனவே பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால், ஜாமீன் பெற மறுத்ததால் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வேறுவழியில்லாமல் ஜாமீன் பெற்றுக் கொண்டு சிறையை விட்டு வெளியே வந்தார்.

தற்போது பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவும் அதையே பின்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP leader Yashwant Sinha was sent to judicial custody by a Hazaribagh court in a case of alleged assault of a government official.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X