For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறந்த பிறகும் பேஸ்புக்கில் போஸ்ட் போட்டு அசத்தலாம்.. அமெரிக்காவில் அறிமுகம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இறந்தவர்களின் பேஸ்புக் பக்கத்தை, அவரது உறவினர்கள் தொடர்ந்து பயன்படுத்தும் புதிய வசதி ஒன்றை பேஸ்புக் அறிமுகப் படுத்தியுள்ளது.

இறந்தவர்களின் பேஸ்புக் பக்கத்தில் திடீரென ஏதாவது செய்தி அப்டேட் செய்யப்பட்டால், அது ஆவியின் வேலையாக இருக்கும் என யாரும் பயப்படத் தேவையில்லை. ஏனெனில், வங்கிக் கணக்குகளில் வாரிசுகளை நியமிக்கும் வசதியைப் போல புதிய வசதி ஒன்று பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

You can now ‘live’ on Facebook even after death

‘லீகசி காண்ட்ராக்ட்' (legacy contact) என்ற இந்த வசதியின் மூலம் இறந்த நபரின் பேஸ்புக் அக்கவுண்டை நிர்வகிக்க குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையோ, நண்பர்களில் ஒருவரையோ நாமினியாக நியமித்துக் கொள்ளலாம்.

அவ்வாறு நாமினேட் செய்யப்பட்டவர் நாம் இறந்த பிறகு நம்முடைய பேஸ்புக் அக்கவுண்டில் profile information-ஐ எடிட் செய்யலாம், கவர் போட்டோவை அப்டேட் பண்ணலாம், நண்பர்களின் ரிக்வெஸ்ட்களை accept அல்லது reject செய்யலாம். போஸ்ட்களை சேமித்து வைக்கலாம். ஆனால், நமது private message-களை அவரால் படிக்க முடியாது.

மேலும், நமது பெயரில் ஒரே ஒரு போஸ்டை மட்டுமே tag செய்ய முடியும். இந்த புதிய வசதி தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Facebook has announced a new feature that will let users remain active on the social networking website even after they pass away.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X