For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாத அமைப்பில் சேர்ந்த 125 பாதுகாப்பு படை வீரர்கள்

By Siva
Google Oneindia Tamil News

காபுல்: ஆப்கானிஸ்தானில் 125 பாதுகாப்பு படை வீரர்கள் தாலிபான் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் பதாக்ஷான் மாகாணத்தில் உள்ள திர்கரன் பள்ளத்தாக்கை தங்கள் வசப்படுத்த பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தாலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே 3 நாட்களாக கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. தாலிபான்களை தாக்குப்பிடிக்க முடியாமல் பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களிடம் சரண் அடைந்துவிட்டனர்.

125 Afghan security personnel join Taliban

இதையடுத்து பள்ளத்தாக்கு தீவிரவாதிகளின் வசம் சென்றுவிட்டது. 3 நாட்கள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 20 தீவிரவாதிகளும், 10 பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகியுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 125 பேர் தாலிபான் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர். பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அந்த 125 பேரும் கடந்த சனிக்கிழமை தாலிபான் அமைப்பில் சேர்ந்துள்ளனர்.

English summary
At least 125 Afghan security personnel have joined the Taliban militant group after three days of fighting in Badakhshan province.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X