For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஷ்யாவின் முதல் நாள் தாக்குதலில் 137 பேர் உயிரிழப்பு, 316 பேர் காயம்.. உக்ரைன் அதிபர் அறிவிப்பு

ரஷ்யாவின் முதல் நாள் தாக்குதலில் 137 பேர் உயிரிழப்பு என உக்ரைன் அறிவித்துள்ளது

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.. ரஷ்யாவுக்கு எதிரான போரில் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என்றும் தங்களுக்கு எந்த நாடும் உதவி செய்ய முன்வரவில்லை என்றும் அதிபர் உருக்கத்துடன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Recommended Video

    Russia - Ukraine Crisis : Chernobyl அணு உலையை கைப்பற்றிய ரஷ்ய படைகள் ?

    நேற்றைய தினம் ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை தொடங்கின... அப்போது, கார்கிவ், டினிப்ரோ நகரங்களில் உள்ள விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது ஏவுகணை தாக்குதலை ரஷ்யா தொடங்கியது..

    பல நகரங்களில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழைகளை பொழிந்தன. இதையடுத்து, கீவ் பிராந்தியத்தின் வடக்கே ரஷ்ய படைகள் புகுந்தன...

    உடனே போரை நிறுத்துங்கள்.. எந்த பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தையே தீர்வு.. புதினிடம் மோடி வலியுறுத்தல்உடனே போரை நிறுத்துங்கள்.. எந்த பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தையே தீர்வு.. புதினிடம் மோடி வலியுறுத்தல்

     18 பேர் மரணம்

    18 பேர் மரணம்

    குறிப்பாக, ஒடேசா பகுதியில் ரஷியா நடத்திய தாக்குதலில் மட்டும் 18 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.. அதேபோல, கீவ் நகரை அடுத்துள்ள புரோவாரி நகரில் தொடர்ந்து ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருந்ததாம்.. பொதுமக்களை எச்சரிக்க சைரன்களும் ஒலித்து கொண்டே இருந்ததாம்..

     ராணுவ கட்டமைப்பு

    ராணுவ கட்டமைப்பு

    இந்த ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைனின் 74 ராணுவ கட்டமைப்புகள் செயலிழக்க செய்யப்பட்டன.. 11 விமான நிலையங்கள், 3 கட்டளை சாவடிகள், கடற்படைகளுக்கான அடிப்படை மையம், போன்றவைகள் இவைகளில் அடக்கம்.. ராணுவ அமைச்சக உளவுப்பிரிவு தலைமையகத்தையும் ரஷ்யா விட்டுவைக்கவில்லை நேற்று மட்டும் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷ்யா நடத்தியதாக கூறப்படுகிறது.. அதேபோல, உக்ரைன் ராணுவ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர்...

     68 பேர் உயிரிழப்பு

    68 பேர் உயிரிழப்பு

    உக்ரைன் படைவீரர்கள், பொதுமக்கள் 68 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்டாலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாகவே செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.. எங்க பார்த்தாலும் குண்டுமழை பொழிவதால், உக்ரைன் மக்கள் உயிரை பாதுகாத்து கொள்ள வெளியேற ஆரம்பித்துவிட்டனர்..

     137 பேர் பலி

    137 பேர் பலி

    இந்நிலையில், முதல் நாள் நடந்த தாக்குதலில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது... இதுதொடர்பாக வீடியோ மூலமாக உரையாற்றிய அவர், "ரஷியப் படைகளின் பெரிய அளவிலான தாக்குதலுக்கு, உக்ரைனில் 137 பேர் நேற்று உயிரிழந்தனர்... 316 பேர் படு காயமடைந்துள்ளனர்... இன்று 137 வீரர்களை இழந்துவிட்டோம்.. அதில் எங்கள் ராணுவம் மற்றும் பொதுமக்களும் அடங்குவர்" என்று தெரிவித்துள்ளார்.

    தலைமறைவு

    தலைமறைவு

    அதேபோல ரஷ்யாவின் 5 விமானங்கள், 2 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும் உக்ரைன் அதிபர் கூறினார்.. போலீல் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கான வீரர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், தலைநகர் கீவ் உள்ளேயும் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளன.. இதில் தன்னுடைய உயிருக்கும் தமது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து எற்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

    முன்பதிவு

    முன்பதிவு

    முன்னதாக, ரஷியாவுக்கு எதிரான முழு ராணுவத்தையும் திரட்டும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் ராணுவ அதிகாரிகளுக்கு ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்... அதாவது, ராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள நபர்களின் எண்ணிக்கை, முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் 90 நாட்களுக்குள் முழு ராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் இதற்கான நிதியை ஒதுக்குமாறும் உக்ரைன் அமைச்சரவையை ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

    English summary
    137 dead after first day of fighting ukraine president volodymyr zelensky
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X