For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இங்கிலாந்து நாடாளுமன்ற கம்ப்யூட்டர்களில் ஆபாச படம் பார்க்க அலைமோதிய கூட்டம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

லண்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடத்திலுள்ள கம்ப்யூட்டர்களில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் சுமார் இரண்டரை லட்சம் முறை, ஆபாச வெப்சைட்டுகளை பார்க்க முயன்றுள்ள தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

நம் நாட்டிலுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் போலவே, இங்கிலாந்திலுள்ள தகவல் சுதந்திர சட்டத்தின்கீழ், அந்த நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று, ஆபாச வெப்சைட் பயன்பாடு பற்றி கேள்வி எழுப்பி, இந்த பதிலை பெற்றுள்ளது.

2.47 lakh attempts made to access porn from UK parliamentary computers in 2014

2013ம் ஆண்டில் நாடாளுமன்ற கம்ப்யூட்டர்களில் மொத்தம் 3 லட்சம் முறை, இதுபோன்ற வெப்சைட்டுகளை பார்க்கும் முயற்சி நடந்துள்ளது. கடந்த ஆண்டு இதுபோல 2 லட்சத்து 47 ஆயிரத்து 876 முறை முயற்சி நடந்துள்ளதாம்.

ஆபாச வெப்சைட்டுகள் பிளாக் செய்யப்பட்டிருந்ததால், நல்லவேளையாக வெப்சைட் உள்ளே சென்று பார்க்கும், 'பாக்கியத்தை' நாடாளுமன்றவாதிகள் பெறவில்லை. ஆனால், இவை அனைத்து நடவடிக்கைகளும் கம்ப்யூட்டர் மோடத்தில் பதிவாகியுள்ளன.

ஒரு நபர் பலமுறை, பல்வேறு ஆபாச வெப்சைட்டுகளை திறக்க முயன்றிருந்தாலும், அதுவும் எண்ணிக்கையில் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். எனவே, முயற்சிகள் மட்டுமே பதிவாகியுள்ளதே தவிர, எத்தனை பேர் இதுபோல முயன்றனர் என்ற விவரம் கிடைக்கவில்லை.

சூரியன் மறையாத சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த பிரிட்டீஷ் நாடாளுமன்ற வளாகத்தில், ஆபாச வெப்சைட்டுக்கு நடந்துள்ள இந்த அடிதடி அந்த நாட்டு மக்களை மட்டுமின்றி, அனைத்து நாட்டு மக்களையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

English summary
In what could be termed as shocking revelation, over 2.47 lakh attempts were made to access pornography websites from UK parliamentary computers in 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X