“மிஸ்ஸிங்”.. 50 நாட்கள் மேலாக விலகாத “மர்மம்” - 2 இந்தியர்களின் கதி என்ன? சீன ராணுவத்தின் பிடியிலா?
இடாநகர்: சீன எல்லை அருகே வசித்து வந்த அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் கடந்த சுமார் 50 நாட்களுக்கு முன் காணாமல்போன நிலையில் இன்னும் கிடைக்காததால் அவர்களது உறவினர்கள் சோகமடைந்துள்ளனர்.
அருணாச்சல பிரதேசம் அஞ்சாவ் மாவட்டத்தில் அமைந்துள்ளது கொலியான் பகுதி. இந்த ஊரை சேர்ந்த படெய்லம் டிக்ரோ, பயிங்சோ மன்யூ ஆகிய 2 இளைஞர்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 19 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.
சீன எல்லையோர பகுதியான சக்லகாமில் வளர்ந்திருக்கும் மருத்துவ குணம் கொண்ட செடிகளை கண்டறிவதற்காக இருவரும் சென்றதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் அவர்கள் இன்னும் சொந்த ஊருக்கே திரும்பவில்லை.

உறவினர்கள் புகார்
காணாமல்போன இருவரையும் மாதக் கணக்கில் தேடி வந்த உறவினர்களும் நண்பர்களும் வேறு வழியின்றி கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார்கள். 2 இளைஞர்களும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் தங்களின் முயற்சிகள் வீணாகிவிட்டதாகவும் உறவினர்கள் புகாரில் தெரிவித்து உள்ளார்கள்.

சீன எல்லை
அதே நேரம் தாங்கள் தேடும்போது கடந்த ஆகஸ்டு 24 ஆம் தேதி ஊர் மக்கள் இருவரையும் பார்த்ததாக தங்களிடம் கூறியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டிக்ரோவின் உறவினர் தெரிவிக்கையில், "இளைஞர்கள் இருவரும் தவறுதலாக சீன எல்லைக்குள் சென்று இருக்கலாம் என்று அஞ்சுகிறோம். எனவே காவல்நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளோம்." என்றார்.

போலீஸ் விசாரணை
அத்துடன் மத்திய மாநில அரசுகளும், ராணுவமும் இளைஞர்கள் இருவரையும் கண்டுபிடிக்க உதவ வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதுகுறித்து அஞ்சாவ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரைக் கம்சி கூறுகையில், மருத்துவ செடிகளை சேகரிப்பதற்காக 2 இளைஞர்களும் சீன எல்லையோரம் சென்றுள்ளதாகவும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எஸ்பி விளக்கம்
"சாட்சிகள், உறவினர்கள், கிராம மக்கள், சீன எல்லையோரம் வசிக்கும் மக்களிடம் விசாரணை நடத்திய பிறகு மாநில அரசிடம் அறிக்கை சமர்பிப்போம். மருத்துவ செடிகளை தேடி வனப்பகுதிக்குள் கிராம மக்கள் செல்வது இயல்பான காரியம். 2 இளைஞர்களும் இந்திய எல்லைக்கு உட்பட பகுதியில் தங்கி இருக்கவும் வாய்ப்புள்ளது.

ஜனவரியில் ஒரு இளைஞர்
தங்கள் கிராமத்திலிருந்து அந்த இளைஞர்கள் கொய்லாங் பகுதிக்கு நடந்து செல்ல 12 நாட்கள் வரை ஆகும்." என்றார். கடந்த ஜனவரி மாதம் மிராம் டரோன் என்ற அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர், மருத்துவ செடிகளை பறிப்பதாக கூறி தவறுதலாக சீன எல்லைக்குள் சென்றார். அவரை பிடித்த சீன படையினர், சில நாட்கள் கழித்து இந்திய எல்லைக்குள் விடுவித்தனர்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications