பயந்து ஓட்டம்.. இலங்கை பாதுகாப்பு படையில் 20,000 பேர் நீக்கம்..பொருளாதார நெருக்கடிக்கு நடுவே அதிரடி
கொழும்பு: இலங்கையில் பாதுகாப்பு படைகளில் இருந்து பயந்து அல்லது விலகி ஓடியவர்களில் ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடாக இலங்கை உள்ளது. இந்நிலையில் தான் இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முதலாக கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.
இதனால் உணவு, எரிபொருட்களின் விலைகள் விண்ணை தொட்டன. அதோடு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவியது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட துவங்கினர்.

இலங்கையில் புதிய அரசு
இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர் தங்களின் பதவிகளை அடுத்தடுத்து ராஜிமானா செய்தனர். தற்போது இலங்கையில் புதிய ஆட்சி நடக்கிறது. அதிபராக ரணில் விக்ரமசிங்கே உள்ளார். இதற்கிடையே இலங்கை அரசு பல்வேறு நாடுகளில் உதவி கேட்டு வருகிறது. இலங்கைக்கு இந்தியா அதிகளவில் உதவி செய்து வருகிறது.

பயந்து ஓடும் வீரர்கள்
இலங்கையின் பாதுகாப்பு படைகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பயந்து அல்லது விலகி ஓடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இலங்கை உள்நாட்டு போர் காலத்தில் இருந்து இது தொடர் கதையாக உள்ளது. அதன்படி நீண்டகாலமாக பணிக்கு திரும்பாத முப்படைகளை சேர்ந்த வீரர்கள் மீது அந்நாட்டில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது. இந்த பொதுமன்னிப்பு காலத்தில் வீரர்கள் பணிக்கு சேரவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் பலரும் அதனை ஏற்கவில்லை.

20 ஆயிரம் பேர் அதிரடி நீக்கம்
இந்நிலையில் தான் இலங்கையில் முப்படை வீரர்கள் ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேணல் நளின் ஹேரத் நேற்று கூறுகையில், ‛‛தற்போது வரை 19,000 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனார்'' என்றார். இந்நிலையில் தான் இன்று மேலும் சிலர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 19,405 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி தற்போது ராணுவத்தை சேர்ந்த 17,222 பேர், கடற்படையை சேர்ந்த 1,145 பேர், விமானப்படையை சேர்ந்த 1,038 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செலவு குறைய வாய்ப்பு
இலங்கையை பொறுத்தமட்டில் முப்படைகளையும் சேர்த்து 2 லட்சம் பேர் பணியாற்றி வந்தனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் 20 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு 539 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இலங்கை ராணுவத்தை பொறுத்தமட்டில் ஓய்வூதியம் பெற வேண்டுமானால் 22 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். இந்நிலையில் தான் தற்போது 20 ஆயிரம் பேர் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது இலங்கையில் செலவினத்தை கொஞ்சம் குறைக்கும் என நம்பப்படுகிறது.

மாற்று பணியில் அமர்த்திய அரசு
முன்னதாக இலங்கையில் உள்நாட்டு போர் என்பது 2009ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. போருக்காக ஏராளமானவர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் போருக்கு பிறகு அவர்கள் பிற பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டனர். அதன்படி நகர கட்டமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். உள்நாட்டு போர் காலம் மற்றும் போருக்கு பிந்தைய காலத்தில் ஏராளமானவர்கள் ஓடியதும், சிலர் வெளிநாடுகளில் தஞ்சமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications