10 நிமிஷத்தில்.. 1.5 லிட்டர் கோகோ கோலா குடித்த இளைஞர் திடீரென பலி.. அதிர வைக்கும் டெஸ்ட் ரிசல்ட்!
பெய்ஜிங்: சீனா தலைநகர் பெய்ஜிங்கில் 1.5 லிட்டர் கோகோ கோலாவை 10 நிமிடங்களில் மளமளவெனக் குடித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே பார்ட்டிகளில் மதுபானங்கள் அல்லது கூல் ட்ரிங்குகளை வேகமாகக் குடிப்பவர்கள் அல்லது ஒரு சிப்பில் குடிப்பவர்கள் யார் எனப் போட்டிகள் நடைபெறும். இது ரிஸ்க் ஆன விளையாட்டு என்றும் இதனால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இருப்பினும், இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாதவர்கள் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் உயிரிழப்புகளும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது.

1.5 லிட்டர் கோகோ கோலாs
பெட் கட்டி மதுபானங்களை மளமளவெனக் குடித்துவிட்டு, போதை ஏறி உயிரிழந்தவர்கள் குறித்த செய்திகளை நாம் படித்திருப்போம். ஆனால் சீனாவில் 1.5 லிட்டர் கோகோ கோலாவை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், வெயிலின் தாக்கம் காரணமாக அருகிலுள்ள கடைக்குச் சென்று 1.5 லிட்டர் கோகோ கோலா ஒன்றை வாங்கியுள்ளார். வெயில் சுட்டெரித்ததில் செம தாகத்தில் இருந்த அவர் வெறும் 10 நிமிடங்களில் அந்த ஒட்டுமொத்த கோகோ கோலாவையும் குடித்துள்ளார்.

திடீர் சிகிச்சை
கோகோ கோலாவை குடித்த 6 மணி நேரத்தில் அவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக அங்குள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முதற்கட்ட மருத்துவ சோதனையில் அந்த இளைஞரின் இதயத் துடிப்பு உச்சத்தில் இருந்துள்ளது. அதேபோல மூச்சுத் திணறல், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட மோசமான அறிகுறிகளும் பலரும் அவருக்கு இருந்துள்ளது. கல்லீரலுக்குக் குறைவான ரத்தம் செல்வதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதை மருத்துவர்கள் கல்லீரல் அதிர்ச்சி என்று அழைக்கின்றனர்.

உயிரிழப்பு
மருத்துவர்களின் அறிக்கையின்படி, அந்த இளைஞர் மிக வேகமாகச் சோடாவை குடித்ததால் அவரது குடலில் வாயு உருவாகியுள்ளது. அது அவரது ரத்தத்தில் கலந்து கல்லீரலையும் பாதித்துள்ளது. இதனால் அவரது கல்லீரலைப் பாதுகாக்கவும் உடலின் மற்ற பாகங்கள் மோசமாவதைத் தடுக்கவும் மருந்துகள் கொடுக்கப்பட்டது, ஆனால் 12 மணி நேரத் தீவிர சிகிச்சைக்குப் பின்னரும் அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அந்த இளைஞரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில், சில மணி நேரங்களில் அவர் உயிரிழந்தார்.

என்ன ஆச்சு
பூரண உடல் நலத்துடன் இருந்த இளைஞர் ஒருவர், கோகோ கோலாவை குடித்த சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கோகோ கோலா நிறுவனம் இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. இருப்பினும், லண்டனின் யுனிவர்சிட்டி வேதியியலாளர் பேராசிரியர் நாதன் டேவிஸ், அந்த இளைஞர் உயிரிழப்பிற்கு கோகோ கோலா காரணமாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனத் தெரிவித்துள்ளார். 1.5 லிட்டர் கோகோ கோலாவை ஒரே நேரத்தில் குடிப்பதன் மூலம் குடலில் வாயு அதிகரித்து அதன் மூலம் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் கூட அதனால் உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்றே அவர் குறிப்பிட்டார்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications