For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அனல் குழம்பு".. அவசர அவசரமாக ஓடிய மக்கள்.. 38 வருடங்களுக்கு பிறகு நடந்த சம்பவம்.. நெருப்பில் ஹவாய்

38 வருடங்களுக்கு பிறகு மவுனா லோவா எரிமலை வெடித்து சிதறி நெருப்பு குழம்பாக ஓடுகிறது

Google Oneindia Tamil News

ஹவாய்: அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மவுனா லோவா எரிமலையானது, வெடித்து சிதறி, நெருப்பு குழம்புகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.. அந்த அனல் ஆற்றை காண ஏராளமானோர், எச்சரிக்கைகளையும் மீறி அங்கு குவிந்து கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஹவாய் தீவில் மவுனா லோவா என்கிற எரிமலை உள்ளது. இந்த எரிமலைதான், உலகிலேயே மிகப்பெரிய எரிமலையாகும்..

கடந்த 1984-ல் இங்கு எரிமலை வெடித்து சிதறியது.. அதுதான், கடைசியாக எரிமலை வெடிப்பு நிகழ்ந்த சம்பவமாகும்.. எப்போதுமே இந்த எரிமலையில், 5 வருடங்களுக்கு ஒருமுறை எரிமலை வெடித்து சிதறுமாம்.

ஸ்டாலினின் '6’ அதிரடி அரசியல் கணக்குகள்.. எம்ஜிஆரை துணைக்கு அழைத்ததன் பின்னணி.. டார்கெட் அவங்க தானா? ஸ்டாலினின் '6’ அதிரடி அரசியல் கணக்குகள்.. எம்ஜிஆரை துணைக்கு அழைத்ததன் பின்னணி.. டார்கெட் அவங்க தானா?

நெருப்பு குழம்பு ஆறு

நெருப்பு குழம்பு ஆறு

ஆனால், 1984க்கு பிறகு எரிமலை வெடித்து சிதறவேயில்லை... 38 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வெடித்து ஆரம்பித்துள்ளது.. கடந்த 27-ம் தேதியில் இருந்து வெடிக்க துவங்கிய இந்த எரிமலையில், இப்போது நெருப்பு குழம்பு ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது.. கிட்டத்தட்ட 165 அடி உயரத்துக்கு லோவா சிதறல்கள் மேலெழுகின்றன.. இதனால், பொதுமக்களுக்கு ஆபத்து நேரலாம் என்பதால், ஹவாய் தீவில் இருந்து மக்கள் சுமார் 2 லட்சம் பேர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

குழம்பு நெருப்புக்கள்

குழம்பு நெருப்புக்கள்

எரிமலைக் குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கி செல்லத் தொடங்கினால்தான் ஆபத்தாகிவிடும் என்பதாலேயே இந்த முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5,271 சதுர அடி கிலோமீட்டர் பரப்பளவில் கொண்ட இந்த எரிமலையானது அந்த தீவில் பாதியளவுக்கு ஆக்கிரமித்துள்ளன... மவுனா லோவா எரிமலை வெளியிடும் வாயுக்கள், மனிதர்களுக்கு ஆபத்தை வெளிபடுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.. ஆனாலும், எரிமலை வெடித்து சிதறுவதை நேரில் காண வேண்டும் என்ற ஆர்வம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது..

பொங்கும் எரிமலை

பொங்கும் எரிமலை

எனவே ஏராளமானோர் அங்கு திரண்டு வருகின்றனர்.. தங்களின் பிள்ளைகளையும் இந்த அரிய நிகழ்வை காண அழைத்து வருகின்றனர்... எரிமலையால் இப்போதுவரை அச்சுறுத்தல் இல்லை என்றாலும், அந்த வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்கிறார்கள்.. இப்போது ஓடிக்கொண்டிருக்கும் நெருப்புக் குழம்பின் ஓட்டமானது, நாளடைவில் வேகம் எடுக்கும் என்றும் புவியியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.. 38 வருடங்களுக்கு பிறகு, எரிமலை வெடித்து சிதறியுள்ளதால், இதுகுறித்து ஆராய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக, ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு இந்த ஆய்வை மேற்கொள்ள போவதாக, நவீன விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்..

நெருப்பு குழம்பு

நெருப்பு குழம்பு

மவுனா லோவா எரிமலையானது, கடந்த சில ஆண்டுகளாகவே வெடிப்பதற்கான அறிகுறிகளை கொண்டிருந்ததாம். எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதறக்கூடும் என்பதால் எதிர்பார்க்கப்பட்டே வந்ததாம்.. ஆனால், கடும்சீற்றத்துடன் எரிமலை காணப்பட்டதே தவிர, வெடித்தது கிடையாது.. கடந்த 1843ம் ஆண்டில் இருந்து இப்போது வரை 33 முறை, இந்த எரிமலையில் சீற்றம் தென்பட்டுள்ளது.. இப்போது வெடித்து பொங்கும் எரிமலையை சுமார் 72 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கோனா என்ற நகரத்தில் இருந்து பார்க்க முடிகிறது என்கிறார்கள்.. அது தொடர்பான போட்டோக்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கின்றன.

English summary
38 years after, largest hawaii volcano mauna loa explosion, what happens next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X