
திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு! பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சோகம்.. மெக்சிகோவில் 4 பேர் பலி
டெனிஸ்: மெக்சிகோவில் உள்ள உணவகம் ஒன்றில் திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 பேர் உயிரிழந்தனர்.
அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனா். உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப்பள்ளியில் நடந்த கொடூர தாக்குதலில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இந்த தொடா் துப்பாக்கி சூடு சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல் மூன்று வாரங்களுக்கு முன் மெக்சிகோவ நாட்டின் முக்கியத் தெருவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டனர். இதுபோன்ற தொடர் சம்பவங்கள் காரணமாக துப்பாக்கிக் கலாசாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. அதேபோல், சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பேச்சும் எழுந்தது.
இந்தநிலையில், மெக்சிகோ நாட்டில் உள்ள உணவகத்தில் திடீரென மர்ம நபர்கள் இரண்டு பேரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். டெனிஸ் பகுதியில் உள்ள உணவகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், திடீரென துப்பாக்கியால் சரமாரியாக துப்பாக்கி மூலம் தாக்குதல் ஈடுபட்டனர். அப்போது உணவகத்தில் இருந்த 5 பேர் மீது குண்டுகள் தாக்கியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், காயமடைந்த ஒருவர் மட்டும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென உணவகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.