பனிக்கட்டியில் புதைந்திருந்த 54 வெட்டப்பட்ட கைகள்.. யார் வெட்டியது, ஏன்.. ரஷ்யாவில் விலகாத மர்மம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவில் காப்ரோவஸ்க் என்ற பகுதியில் இருந்த பனிக்கட்டி படத்தில் இருந்து 54 வெட்டப்பட்ட கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.

காப்ரோவஸ்க் பகுதியில் இருக்கும் ஆமூர் ஆற்றுப்பகுதிக்கு அருகில் இந்த கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆறு ரஷ்யா சீனா எல்லையில் இருக்கிறது.

இது குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மருத்துவர்கள் அந்த கைகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

கண்டுபிடித்தார்கள்

கண்டுபிடித்தார்கள்

அந்த பனிக்கட்டி படலத்தை நேற்று கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எடுத்துள்ளார்கள். கட்டுமான பணி ஒன்றிருக்காக இந்த வெட்டும் பணி நடந்து இருக்கிறது. அப்போதுதான் இந்த கைகள் அனைத்தும் அருகருகே வெட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

மொத்தம் எத்தனை

மொத்தம் எத்தனை

இதில் மொத்தம் 54 வெட்டப்பட்ட கைகள் இருந்துள்ளது. 27 ஜோடிகள் ஆகும். இந்த 27 கைகளில் பல கைகளில் கைரேகை அழிக்கப்பட்டு இருக்கிறது. இப்போதுவரை ஒரே ஒரு கையில் மட்டுமே கைரேகை கட்னுபிடிக்கப்பட்டுள்ளது.

காரணம்

காரணம்

இந்த கைகள் யாருடையது, ஏன் வெட்டப்பட்டது என்று தெரியவில்லை. அதேபோல் இந்த கைகளை வெட்டியது யார் என்ற விவரமும் இதுவரை வெளியாகவில்லை. எந்த காலமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் 20 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பரிசோதனை

பரிசோதனை

தற்போது இந்த கைகள் சோதனைக்காக எடுத்து செல்லப்பட்டு இருக்கிறது. அந்த ஒரு கையில் இருக்கும் ரேகையை வைத்து ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா என்று சோதனை நடத்த இருக்கிறார்கள். அதன்பின்பே இதில் முக்கியமான தகவல்களை தெரிவிக்க முடியும் என்றுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
57 sliced human hands found in Amur River island Russia. It is 27 pair of hands. Police investigating in this case.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற