நள்ளிரவில் நடந்த துயரம்! துருக்கி-ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7 பேர் சடலமாக மீட்பு!
நிலநடுக்கம் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன. அதேபோல உறைபனி நிலவுவதாலும் மீட்பு பணியில் சுணக்கம் நீடித்து வருகிறது
அங்காரா: துருக்கி-ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இதில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
EMSC-ன் அறிவிப்புப்படி நேற்று இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இங்குள்ள 'கோய்' நகரில் வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளன. மின்சாரம் தடைப்பட்டுள்ளதாலும், உறைபனி நிலவுவதாலும் மீட்பு பணிகள் தாமதமாகி வருகின்றன. தற்போது வரை 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

துருக்கி-ஈரான் எல்லையில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 122 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் கோய் நகரத்திற்கு கூடுதல் மீட்ப்புப்படைகளை துருக்கி அனுப்பி வைத்திருக்கிறது. இங்குள்ள மருத்துவமனைகளிலும் நிலநடுக்கம் காரணமாக மின்சார தேவை துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே மாற்று மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
-
'ஓமன்'ஐயும் தகர்த்துவிடுவேன்.. நட்பு நாடு என்றும் பாராமல் மிரட்டிய டிரம்ப்! மத்திய கிழக்கில் டென்ஷன் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
குவைத்தில் தாக்குதல்.. புகுந்து அடித்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்.. உச்சகட்ட பதற்றத்தில் வளைகுடா! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications