"கரம் மசாலா பர்கர்” ரெசிப்பியால் ஒபாமா, மிச்சேலைக் கவர்ந்த 9 வயது சிறுமி ஸ்ரேயா!
நியூயார்க்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க சிறுமி ஒருவர் தன்னுடைய "கரம் மசாலா பர்கர்" மற்றும் ரெய்த்தா ரெசிப்பியால் அதிபர் ஒபாமாவையும், மிச்சேல் ஒபாமவையும் பிரமிக்குள்ளாக்கியதுடன், மிச்சேல் ஒபாமாவுடன் விருந்து சாப்பிட்ட பெருமையையும் பெற்றுள்ளார்.
இலினியாஸைச் சேர்ந்த ஸ்ரேயா பட்டேல் என்கின்ற அந்த சிறுமி அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற 55 இளம் சமையல்கலைஞர்களான குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட 4வது ஆண்டு விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற சமையல் போட்டியானது, ஆரோக்கியமான உணவு என்ற தலைப்பில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஸ்ரேயாவின் கரம் மசாலா பர்கரை ருசி பார்த்த ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சேல் அவருடைய முயற்சியினை பாராட்டியுள்ளனர். மேலும், அவரின் அந்த பர்கர்தான் முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரேயாவிற்கான பரிசாக கடந்த 10 ஆம் தேதியன்று மிச்சேல் ஒபாமாவுடன் ஒரு அருமையான மதிய உணவு அருந்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஸ்ரேயா பட்டேல், "என்னுடைய பாட்டி மற்றும் அம்மாவின் எல்லா உணவுத் தயாரிப்புகளையும் நான் கவனித்திருக்கின்றேன். அவர்களுக்கு என்னுடைய 3 வயதிலிருந்தே சமையலில் உதவியும் செய்து வந்துள்ளேன். எனக்கு கலக்குதல், அளத்தல், நறுக்குதல், கழுவுதல் எல்லாமே மிகவும் பிடிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
"என்னுடைய பாட்டிக்கு மிகவும் பிடித்த ரெசிப்பி இது. நான் அடிக்கடி பள்ளிக்கு இதைத்தான் எடுத்துச் செல்வேன்" என்றும் தெரிவித்துள்ள ஸ்ரேயாவிற்கு தன் தந்தையைப் போல் பார்மசிஸ்ட் ஆக ஆசையாம். அவருடைய அந்த பர்கர் ரெசிப்பி கரம் மசாலா, தனியா, இஞ்சி, மிளகாய் எல்லாம் கலந்த கலவையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications