For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரணப் படுக்கையில் காதலியைக் கரம் பிடித்த இங்கிலாந்து சிறுவன்... கடைசி ஆசையாக!

Google Oneindia Tamil News

பிரிமிங்காம்: இதயத்தை கலங்க வைக்கும் சோகக்கதை ஒன்று இங்கிலாந்தில் நடந்துள்ளது. தனது மரணப் படுக்கையில் படுத்தபடியே தனது காதலிக்கு மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார் இளைஞர் ஒருவர்.

16 வயதான ஒமர் அல் ஷேக்குக்கு புற்றுநோய் முற்றிய நிலை. அவருக்கு சிகிச்சை அளிக்க ஸ்டெம் செல் தானம் செய்வோர் கிடைக்காத நிலை. இதனால் இன்னும் சில நாட்களே வாழ முடியும் என்று டாக்டர்கள் கூறி விட்டனர். வாழ்வின் கடைசிப் பக்கத்திற்கு வந்து விட்ட ஒமர் தனது மனம் கவர்ந்த, தன் வயதேயான அமியிடம் தனது காதலையும், திருமணம் செய்யும் விருப்பத்தையும் சொன்னார். அமியும் சம்மதித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 3 நாட்களில் ஒமர் மரணத்தைத் தழுவினார்.

முன்னதாக ஒமரின் நாட்கள் எண்ணப்படுவதாக பிரிமிங்காம் க்வீன் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் அவரது குடும்பத்தாரிடம் கூறவே, தனது கடைசி ஆசையைச் கூறியுள்ளார் ஒமர். அமியும் உடனடியாக திருமணத்திற்கு ஒத்துக் கொண்டார். அதுவும் புன்னகையுடன்.

கடைசி ஆசை...

கடைசி ஆசை...

ஒமரின் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல், அவரது வாழ்க்கை முடியப் போவது குறித்து வருத்தப்படாமல், ஒமரின் கடைசி ஆசையை மிக மிக சந்தோஷமாக நிறைவேற்றி வைத்துள்ளார் அமி.

மருத்துவமனையிலேயே திருமணம்...

மருத்துவமனையிலேயே திருமணம்...

16 வயது இளைஞனாக மருத்துவமனைக்கு வந்த ஒமர் திருமணமான நபராக உயிர் பிரிந்து சென்றுள்ளார். மருத்துவமனையில் இந்தத் திருமணம் நடந்தது. இருவரும் மணக்கோலத்தில் வர குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவமனை ஊழியர்கள் புடை சூழ திருமணம் சந்தோஷமாக நடந்தேறியது.

மகிழ்ச்சி...

மகிழ்ச்சி...

இந்தத் திருமணம் குறித்து அமி கூறுகையில், ‘நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் ஒமருக்கு புற்றுநோய் பாதிப்பு வந்து விட்டது. வளர்ந்து பெரியவர்களானதும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக 16 வயதில் அது நடந்து விட்டது. இருப்பினும் இதற்காக நான் மிகவம் மகிழ்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

லுகேமியா...

லூகேமியா புற்று நோயால் மரணமடைந்தார் ஒமர். சிறு வயதினருக்கு அது பெரும்பாலும் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Omar Al Shaikh, 16, was diagnosed with acute myeloid leukaemia. In March doctors said he had just three months to find a stem cell donor. But, teenager was too ill to have the transplant and was given days to live. He immediately proposed to his girlfriend Amie, also 16, and they married on Friday, just three days before Omar lost his battle with cancer on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X