பிலிப்பைன்ஸ் இராணுவ விமானம் தரையிரங்கும் போது பயங்கர விபத்து.. 29 பேர் மரணம்
மணிலா; பிலிப்பைன்ஸ் விமானப்படையின் சி -130 என்ற ராணுவ சரக்கு விமானம் சுலுவில் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானது. 85 பேருடன் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 29 பேர் பலியாகி உள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் .
Recommended Video
பிலிப்பைன்ஸ் நேரப்படி காலை 11:30 மணியளவில் ராணுவ சரக்கு விமானம் இந்த கோர விபத்தில் சிக்கியிருப்பதாக ஊடக செய்திகளில் சொல்லப்படுகிறது. விபத்துக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
விமானம் சுலுவில் உள்ள ஜோலோ துறைமுகத்தில் தரையிறங்கிய போது விபத்தில் சிக்கியிருக்கிறது. மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகின்றன.

85 பேர் சென்றர்
பற்றி எரிந்து கொண்டிருக்கும் இராணுவ சரக்கு விமானத்தில் இருந்து இதுவரை குறைந்தது 15 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் தலைமை ஜெனரல் சிரிலிட்டோ சோபெஜானா உறுதிப்படுத்தினார்.
சி -130 விமானத்தில் குறைந்தது 85 பேர் சென்றதையும் அவர் உறுதிப்படுத்தினார். இந்த விபத்தில் இதுவரை மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

ராணுவ தளபதி கவலை
மீட்பு படை வீரர்கள் விமானப்படை தளத்தில் களம் இறங்கி உள்ளனர். இந்த விபத்தில் இருந்து அதிக உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று ராணுவ தளபதி சிரிலிட்டோ சோபெஜானா தொலைபேசி பேட்டியில் கூறினார்.

பணிக்கு சென்றவர்கள்
விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் இராணுவ வீரர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் 11 வது காலாட்படை பட்டாலியனின் கூட்டு பணிக்குழுவினர் ஆவர். பணிகளுக்காக சுலுவுக்கு ராணுவ விமானத்தில் சென்றிருக்கிறார்கள்.

விபத்து எப்படி
விமானம் தரையிறங்கும் போது இந்த கோர விபத்து நடந்திருக்கிறது என்பது பிலிப்பைன்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானம் விழுந்த உடன் தீபற்றி எரிந்தால் 29 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அனைவரும் மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications