ஆப்கானில் கோர தாக்குதல்! பள்ளியில் குண்டு வெடிப்பு! “ஷியா ஹசாரா” முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலா?
காபூல் : தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்த நிலையில் 7 குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது.
ஆப்கானின் எதேச்சதிகாரம் காரணமாக பல்வேறு உலக நாடுகள் அந்நாட்டு தூதரக உறவை உதவிகளையும் நிறுத்திவிட்டன.

ஆப்கான் தாலிபான் ஆட்சி
பிற்போக்குத்தனமான கட்டுப்பாடுகளால் பல்வேறு உலக நாடுகள் ஆப்கானை தனிமைப்படுத்திய நிலையில் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது அமெரிக்கா, சர்வதேச நிதியம், உலக வங்கி போன்றவை ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவதை நிறுத்தி விட்டன. இதனால் அந்நாட்டில் நெருக்கடி அதிகரித்து வருகிறது.

ஷியா ஹசாரா மக்கள்
இந்நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த பிறகு அங்கு ஷியா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையின மக்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் எழுந்துள்ளது. சியா முஸ்லிம்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு கூறியிருந்த நிலையில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு ஆப்கானிஸ்தானின் அவர்களின் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது.

பள்ளியில் தீவிரவாத தாக்குதல்
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இன்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. பள்ளிக்கூடத்தில் அடுத்தடுத்து மூன்று குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறிய நிலையில் அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர், மற்றும் உள்ளூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

4 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்தக் கோரத் தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயமடைந்ததாகவும் 4 பேர் இறந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகி உள்ள தகவல்கள் கூறுகின்றன. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதே நேரத்தில் ஏற்கனவே கூறியபடி ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பிடித்த பிறகு அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications