For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேலைக்கு போக ஆசைப்பட்டது தப்பா.. ஆப்கான் பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்.. தலிபான்களின் குரூரம்!

பெண் போலீஸின் கண்களை தோண்டி எடுத்த தாலிபன்கள்

Google Oneindia Tamil News

காபூல்: இஸ்லாமிய பெண் ஒருவர், அந்த அளவுக்கு பெரிதாக ஒன்னும் ஆசைப்படவில்லை.. சொந்தமாக வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் விரும்பினார்.. அதற்கே அவருடைய கண்கள் பறிக்கப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் கதேரா என்ற பெண்.. 33 வயசாகிறது.. இவர் பெண் போலீசாக வேலைக்கு சேர்ந்துள்ளார். சம்பவத்தன்று டியூட்டி முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் பைக்கில் வந்து, கதேராவை ஆவேசத்துடன் சரமாரியாக தாக்கினர்.. பிறகு துப்பாக்கியை எடுத்து அவரை சுட்டுவிட்டனர்.. அப்போதும் வெறிஅடங்காத அவர்கள், குதேராவின் கண்களை கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

இளம்பெண்

இளம்பெண்

ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்துபோன கதேரா அங்கேயே சுருண்டு விழுந்தார்.. அவரது அலறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, கதேராவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. உயிருக்கு ஆபத்தான நிலையில்தான் கதேரா அனுமதிக்கப்பட்டார்.. தீவிரமான சிகிச்சையும் நடந்தது.. ஆனால், கண்விழித்த கதேராவுக்கு எல்லாமே இருட்டாகிவிட்டது.

 பேண்டேஜ்

பேண்டேஜ்

பதறி துடித்த கதேரா, ஏன் என்னால் பார்க்கமுடியலையே என்று கதறி அழுதார்.. உடனே டாக்டர்களும், கண்களுக்கு பேண்டேஜ் போட்டிருப்பதால், உடனே பார்க்க முடியாது என்று சாக்கு போக்கு சொல்லி இருக்கிறார்கள்.. ஆனால் பேண்டேஜ் எடுத்துவிட்ட பிறகும் பார்வை வராததை நினைத்து, அப்போதுதான் உணர்ந்தார் கதேரா.

கதேரா

கதேரா

தன்னை இப்படி கொடூரமாக தாக்கியது தாலிபன் நபர்கள் என்று கதேரா போலீசில் தெரிவித்தார்.. இதையடுத்து, போலீசாரும் கதேரா சொன்னதையே சொல்கிறார்கள்.. ஆனால், அப்படி ஒரு தாக்குதலை தாங்கள் நடத்தவே இல்லை, இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றும் தாலிபன்கள் கூறுகிறார்கள். இதனிடையே, கதேராவின் அப்பாவே கூலிப்படை விட்டு மகள் மீது இந்த தாக்குதலை நடத்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இதற்கு காரணம், கதேரா வேலைக்கு போவது அவர் அப்பாவுக்கு பிடிக்கவில்லையாம்..

ஆத்திரம்

ஆத்திரம்

ஆரம்பத்தில் இருந்தே இதற்கு எதிர்ப்பு சொல்லி உள்ளார்.. அதனால் அப்பாதான் மகளை இப்படி செய்திருக்கலாம் என்கிறார்கள். வேலைக்கு சேர்ந்து முழுசா ஒரு வருஷம்கூட ஆகவில்லையாம்.. அதற்குள் இப்படி ஒரு பயங்கரம் கதேராவுக்கு நடந்துவிட்டது. எது எப்படி இருந்தாலும், வேலைக்கு சென்று சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் ஒரு பெண் கடுமையாகமுயற்சித்தும் அது இன்று சிதைந்துவிட்டது.. "பறிக்கப்பட்டது கண்கள் மட்டுமல்ல, என் கனவுகளும்தான்" என்கிறார் கதேரா.

English summary
Afghan lady police blinded and shot for getting a job
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X