For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூவரும் உடலுறவு... போதையில் தடுமாறி விழுந்து மரணித்த மாடல் அழகி- மவுனம் கலைத்த ஜான்சன்

மாடல் அழகி இவானா ஸ்மித் மர்ம மரணம் பற்றி ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு வாய் திறந்துள்ளார் கோடீஸ்வரர் அலெக்ஸ் ஜான்சன்.

Google Oneindia Tamil News

Recommended Video

    போதையில் தடுமாறி விழுந்து மரணித்த மாடல் அழகி- மவுனம் கலைத்த ஜான்சன்-வீடியோ

    கோலாலம்பூர்: மாடல் அழகி இவானா ஸ்மித் மர்ம மரணம் பற்றி கோடீஸ்வரர் அலெக்ஸ் ஜான்சன் மவுனம் கலைத்துள்ளார். அந்த மரணத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். கொடூர மரணத்தில் இருந்து தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

    டச்சு மாடல் அழகி இவானா ஸ்மித் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிர்வாணமாக பால்கனியில் சடலமாகக் கிடந்தார். இவானாவின் மரணம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோடீஸ்வரர் அலெக்ஸ் ஜான்சன், அவரது மனைவி லூனா ஆகியோரை கைது செய்தனர்.

    குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில் இருவரும் விடுவிக்கப்பட்டனர். இவானின் மர்ம மரணம் நிகழ்ந்து 18 மாதங்கள் கடந்த நிலையில் அலெக்ஸ் ஜான்சன் மவுனம் கலைந்துள்ளார்.

    கவர்ச்சி மாடல் அழகி

    கவர்ச்சி மாடல் அழகி

    மாடல் அழகி இவானா ஸ்மித் டச்சு நாட்டைச் சேர்ந்தவர். கோலாலம்பூரில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியின் பால்கனியில் இருந்து விழுந்த அவர் 6வது மாடியில் நிர்வாணமான முறையில் கண்டெடுக்கப்பட்டார். இவானாவின் மரணம் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் மலேசியா போலீசாரால் விசாரிக்கப்பட்டு வந்தது.

    பிட்காயின் ஜாம்பவான் ஜான்சன்

    பிட்காயின் ஜாம்பவான் ஜான்சன்

    இவானாவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பு அமெரிக்க தொழிலதிபர் அலெக்ஸ் ஜான்சன் என்பவருக்குச் சொந்தமானது.

    இவானா உடன் அலெக்ஸ் ஜான்சனும், அவரது மனைவி லூனாவும் உடல் உறவு கொண்டதை ஒப்புக்கொண்டனர். ஆனால் தாங்கள் கொலை செய்யவில்லை என்று மறுத்தனர்.

    கணவனுடன் படுக்கையில் பார்த்தேன்

    கணவனுடன் படுக்கையில் பார்த்தேன்

    கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவானா உடன் இந்த தம்பதியருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. மூவருமே ஒன்றாக சேர்ந்து மது அருந்துவார்கள். ஒன்றாக உறவில் ஈடுபடுவார்களாம். இதனை ஜான்சனின் மனைவி லூனா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். 2017 நவம்பர் மாதம் ஹோட்டல் அறையில் மூவரும் உறவில் ஈடுபட்டனர்.

    போதையில் இவானா

    போதையில் இவானா

    டிசம்பர் 6ஆம் இரவில் நடைபெற்ற விருந்தில் மூவரும் பங்கேற்றனர். இவானா அதிக போதையில் இருந்தார். டிசம்பர் 7ஆம் தேதி அதிகாலையில் ஜான்சன் வீட்டிற்கு மூவரும் திரும்பினர். நடக்க முடியாத இவானாவை ஜான்சன் தனது கைகளால் தூக்கிக்கொண்டு லிப்டில் சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

    மூவரும் உறவில் ஈடுபட்டோம்

    மூவரும் உறவில் ஈடுபட்டோம்

    டிசம்பர் 7 ஆம் தேதி இவானா கோலாலம்பூரில் உள்ள ஜான்சன் வீட்டிற்கு சென்றிருந்தார். காலையிலேயே வந்த அவர், அதிக போதையில் இருந்தாராம். லூனா வெளியே சென்றிருந்த நேரத்தில் ஜான்சனுடன் உறவில் ஈடுபட்டாராம். அவர் தூங்கிய பின்னர் லூனா உடன் உறவு கொண்டாராம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

    சடலமாக கண்டெடுப்பு

    சடலமாக கண்டெடுப்பு

    களைப்பில் தான் உறங்கி விட்டதாகவும் கண் விழித்து பார்த்த போது இவானாவை காணவில்லை என்றும் கூறினார் லூனா. இவானாவின் உடைகள், செருப்பு அனைத்துமே படுக்கை அறையில்தான் இருந்தன. மாடலிங் செய்ய வெளியே போயிருப்பார் என்ற நினைத்த நிலையில் மாலை 5 மணிக்கு காவல்துறையினர் வந்து எழுப்பிய பின்னர்தான் விபரம் தெரிந்தது என்றும் கூறியிருந்தார் லூனா. இவானாவின் மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

    தம்பதியர் விடுதலை

    தம்பதியர் விடுதலை

    இவானாவின் உடலை பிரேத பரிசோனை செய்த போது அவர் அதிக அளவில் மதுவும், கொகைகன் என்ற போதைப்பொருள் உட்கொண்டதும் தெரியவந்தது. இவானா மரணம் தொடர்பாக ஜான்சன், லூனா தம்பதியர் கைது செய்யப்பட்ட நிலையிலும் குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தால் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

    18 மாத மவுனம்

    18 மாத மவுனம்

    இவானாவின் மரணம் நிகழ்ந்து 18 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது மவுனம் கலைந்துள்ளார் ஜான்சன். இவானாவின் மரணத்திற்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். கொடூர மரண வழக்கில் தங்கள் மீதான சூனிய வேட்டை முடிவுக்கு வந்தது என்றும் கூறியுள்ளார்.

    திகில் படம் போல பரபரப்பாக நடந்த ஒரு மாடல் அழகியின் மரணம், கோடீஸ்வர தம்பதியின் கைது, பாலியல் உறவு என மலேசிய ஊடகங்களில் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.

    English summary
    After 18 months the Johnsons have broken the silence, claiming their innocence in the grisly murder case and calling for an end to their witch hunt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X