எப்படி இருந்த அமெரிக்கா இப்படி ஆய்ருச்சு.. மோடிக்கு வலிந்து வலிந்து அழைப்பு
வாஷிங்டன்: மோடியை முறைத்துக் கொண்டது, விசா கொடுக்க மறுத்தது எல்லாம் பழங்கதையாகி விட்டது. இப்போது மோடிக்கு வலிந்து வலிந்து வந்து அழைப்பு விட்டபடி இருக்கிறது அமெரிக்கா. மோடியோ அமெரிக்காவை பெரிதாக கண்டு கொள்ளாமல் திராட்டில் விட ஆரம்பித்திருக்கிறார்.
மோடி காலத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பெரிய அளவுக்கு அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் தரப்பட மாட்டாது என்பது தெளிவாகி வருகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவின் எடுப்பார் கைப்பிள்ளை ரேஞ்சுக்குத்தான் இந்தியா இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்காவை சற்று தூர வைக்கும் முடிவில் மோடி தரப்பு இருப்பதாகவே தெரிகிறது.
மாறாக, இதுகாலம் வரை இந்தியாவுடன் நெருக்கமாக இருந்து, அமெரிக்காவின் இறுக்கமான உறவால் சற்று விலகிப் போய் விட்ட நாடுகளுடன் நட்பைப் புதுப்பிக்கவும், இறுக்கமாக்கவும் மோடி ஆர்வம் காட்டுவதாகவும் தெரிகிறது.
இதை உணர்ந்துதான் ஒன்றுக்கு இரண்டு முறை அதிபர் ஒபாமாவே மோடியைத் தொடர்ந்து தொடர்பு கொண்டு அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஒபாமா -கெர்ரி
ஒபாமாவும் சரி, வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும் சரி, புதிய இந்திய அரசுடன் இணக்கமான நட்புறவை பேணிக் காக்க ஆர்வமாக உள்ளனர். இதற்காக மோடியை தொடர்ந்து 2க்கும் மேற்பட்ட முறை இருவரும் தொடர்பு கொணடு பேசியுள்ளனர்.

கண்டுக்காத மோடி
ஆனால் தனக்கு வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர், ஜப்பான் பிரதமர், வங்கதேச பிரதமருக்கெல்லாம் நன்றி சொல்லிய பிறகுதான் லேட்டாகத்தான் அமெரிக்காவின் வாழ்த்துக்கே நன்றி கூறி கடுப்படித்தார்.

மீசையில் மண் ஒட்டாத அமெரிக்கா
மோடி இப்படி கடுப்படித்தாலும் கூட இந்தியாவைக் கண்டு கொள்ளாமல் இருக்க அமெரிக்காவால் முடியாதே.. காரணம், கோடானு கோடி டாலர்களில் இந்தியாவில் அமெரிக்காவின் ஏகப்பட்ட பிசினஸ் இருக்கிறதே.. அதெல்லாம் ஸ்டாப் ஆகி விட்டால் என்னாவது.. எனவே கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத குறையாக மோடி அமெரிக்கா வர வேண்டும் என்று அடுத்தடுத்து அழைப்பு விடுத்து வருகிறது.

மோடி ஆதரவை எதிர்பார்க்கவில்லை
மோடிக்கும், பாஜகவுக்கும் மக்கள் மத்தியில் இப்படி ஒரு பெரிய ஆதரவு கிடைக்கும் என்பதை அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை. இதனால்தான் இப்போது வேறு வழியில்லாமல் இறங்கி வந்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவின், தென் மத்திய ஆசியாவுக்கான உதவி அமைச்சர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறுகையில், இந்திய மக்களின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். மோடி பிரதமராவதை வரவேற்கிறோம். அவருடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.

மோடியை வரவேற்க ஒபாமா ஆர்வம்
மேலும் அவர் கூறுகையில், மோடியை அமெரிக்காவுக்கு வரவேற்க அதிபர் ஒபாமா ஆர்வமாக உள்ளார். உலகின் பிற நாடுகளைப் போலவே அமெரிக்காவும், இந்தியாவில் நடந்த மாற்றத்தை வரவேற்கிறது என்றார்.
இந்தியாவில் மட்டுமல்ல.. அமெரிக்காவிலும் கூட அரசாங்க அளவில் மோடியால் பலரது மனநிலை மாறி விட்டதையே இது காட்டுகிறது.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்!












Click it and Unblock the Notifications