For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"தொழுவத்தில்" ஒரே அதிசயம்.. 15 நாளாகிடுச்சே.. அமானுஷ்யமா? மூளை வீங்கிடுச்சா? இப்படியெல்லாம் நடக்குமா

சீனாவில் செம்மறி ஆடுகள் வட்டமடித்து சுற்றும் வீடியோ ஒன்றும் ஷேர் ஆகி வருகிறது

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: 15 நாட்களையும் கடந்து செம்மறி ஆடுகளின் வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்து வருவதுடன், அந்த ஆடுகளின் உடல்நிலை குறித்தும் இணையவாசிகள் அக்கறை மிகுந்த கேள்விகளை எழுப்ப தொடங்கிஉள்ளார்கள். என்ன நடந்தது?

வட சீனாவில் இனெர் மங்கோலியா என்ற பகுதி உள்ளது... இங்கே போடௌ என்ற இடத்தில் வசித்து வருபவர் மியோ... இவர் ஆட்டுப்பண்ணை ஒன்றை சொந்தமாகவே வைத்திருக்கிறார்.

அந்த பண்ணையில் மொத்தம் 34 ஆட்டு தொழுவங்களை தனித்தனியாக கட்டி வைத்துள்ளார்.. இந்த ஒவ்வொரு ஆட்டு தொழுவத்திலும் நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகளை வைத்து பராமரித்து வருகிறார்.

இலவச ஆடு மாடு திட்டம் தொடரும்..38,800 ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 செம்மறி ஆடுகள் - முதல்வர் அறிவிப்பு இலவச ஆடு மாடு திட்டம் தொடரும்..38,800 ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 செம்மறி ஆடுகள் - முதல்வர் அறிவிப்பு

 ஆட்டுத் தொழுவம்

ஆட்டுத் தொழுவம்

வரிசையாக கட்டப்பட்டுள்ள 34 ஆட்டு தொழுவங்களில், ஒரு தொழுவத்தை தாண்டி இன்னொரு தொழுவத்திற்குள் இந்த ஆடுகள் செல்ல வாய்ப்பில்லை... இந்நிலையில், அதில் உள்ள 13வது தொழுவத்தில் உள்ள ஆடுகள், சில தினங்களுக்கு முன்பு திடீரென வட்டமாக சுற்ற ஆரம்பித்துவிட்டன.. எல்லா ஆடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நின்று, கடிகாரம் போல, ரவுண்டாக சுற்ற துவங்கிவிட்டன.. ஆரம்பத்தில் ஒருசில ஆடுகள் மட்டும்தான் இப்படி வட்டம் அடித்து நடக்க ஆரம்பித்ததாம்..

 ஷிப்ட் மாறி ஷிப்ட்

ஷிப்ட் மாறி ஷிப்ட்

அவைகளை பார்த்ததும் மற்ற ஆடுகளும் அடுத்தடுத்த நாட்களில் அவைகளை போலவே வட்டமாக நடக்க ஆரம்பித்துள்ளன. எல்லா ஆடுகளும் ஒரே மாதிரியாக, ஒரே திசையில், ஒரே நேரத்தில், வட்டமாக நடக்கின்றன.. 15 நாட்களை கடந்தும் இந்த ஆடுகள் இப்படியேதான் நடந்து கொண்டிருக்கின்றன.. இரவு பகலாக ஷிப்ட் போட்டு வட்டமடித்து நடக்கின்றன.. இந்த செம்மறி ஆடுகள் வட்டமடித்து நடந்து, களைப்பாகி சற்று ஒதுங்கும்போது, அந்த இடத்தில், அங்கு நின்றுகொண்டிருக்கும் வேறு சில செம்மறி ஆடுகள், வந்து வரிசையில் நின்றுவிடுகின்றவாம்..

 தொழுவம்

தொழுவம்

இப்படி ஆடுகள் ரெஸ்ட் எடுக்க சென்றாலும்கூட, வட்டமாக சுழல்வதில் எந்தவித தடையும் இதுவரை காணப்படவில்லை. இந்த வீடியோதான் இணையத்தில் பரவி வருகிறது.. இது பலருக்கு ஆச்சரியத்தையும், பலருக்கு குழப்பத்தையும், தந்து வருகிறது.. இந்த ஆடுகள் ஏன் இப்படி வட்டமடித்து நடக்கின்றன? 15 நாட்களாக தொழுவத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற கேள்விகளும் இணையத்தில் பரவியது.. இதற்கு 2 காரணங்கள் சொல்லப்படுகின்றன.. இதெல்லாம் ஏலியன்ஸின் வேலையாக இருக்கலாம் என்கிறார்கள்..

 பித்து பிடித்தாச்சு

பித்து பிடித்தாச்சு

மேலும் சிலர் அமானுஷ்யம்தான் காரணம், அதுதான் இப்படி ஒரே இடத்தில் உயிர்களை பித்து பிடித்ததுபோல் சுற்ற வைக்கும், அழிவு வரப்போகிறது என்பதற்கான அறிகுறிதான் இது" என்கிறார்கள்.. மற்றொருபக்கம், இது ஆடுகளுக்கு ஏற்படும் ஒருவித நோய் என்கிறார்கள் டாக்டர்கள்.. ஆடுகளின் மூளையை பாதிக்கும் லிஸ்டீரியோசிஸ் (Listeriosis) என்ற பாக்டீரியல் நோயின் பாதிப்புகளின் அறிகுறிதானாம்.. அதாவது, மூளையின் ஒரு பகுதியை இந்த பாக்டீரியா தாக்கும்போது, ஆடுகள் இது போல் ஒரே இடத்தில் இடைவிடாமல் வட்டமிடுமாம்..

 வீங்கிய மூளை

வீங்கிய மூளை

ஒரு பக்கம் மூளையை வீக்கம் அடைய செய்து, இப்படி வித்தியாசமாக நடந்து கொள்ள தோன்றுமாம்.. இந்த அறிகுறி தென்பட்ட 2 நாட்களுக்குள் ஆடுகள் உயிரிழக்க கூட வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. இப்படித்தான், கடந்த வருடமும் கிழக்கு சாக்செக்ஸில் செம்மறி ஆடுகள் வட்டமடித்து, கொஞ்ச நாள் கழித்து நின்றுவிட்ட சம்பவமும் நடந்ததை டாக்டர்கள் நினைவுபடுத்துகிறார்கள்.. ஆனால், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆட்டுப்பண்ணையின் உரிமையாளர் சொல்லும்போது, முதலில் ஒரு சில ஆடுகள் இப்படித்தான் சுற்றத் தொடங்கியது..

அமானுஷ்யம்

அமானுஷ்யம்

அதை பார்த்ததுமே மற்ற ஆடுகளும் அதனுடன் சேர்ந்து கொண்டன.. ஆனால், ஆடுகள் எல்லாமே நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றன.. எந்த ஒரு ஆடுக்கும் பாதிப்பு இருப்பது போல் தெரியவில்லை" என்றார். ஆடுகள் வட்டமாக ஒரே இடத்தில் சுழன்று நடப்பது, 15 நாட்களை கடந்து சென்றுள்ள நிலையில், அது விலங்குகள் நல ஆர்வலர்களுக்கும், இணையவாசிகளுக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.. ஒருவேளை, பாக்டீரியா தொற்றாக இருந்துவிட்டால் அதனால் பல உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.. எனவே, ஆடுகள் சோர்வாகவோ அல்லது கிறங்கி விழநேர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகும்படி இந்த ஆட்டுப்பண்ணை ஓனருக்கு சிலர் அட்வைஸ்கள் தந்து வருகின்றனர்.

 மூளை வீக்கம்

மூளை வீக்கம்

இந்த ஆடுகளில் 13 ஆடுகள் மட்டும் ஒரு வட்டமாக சுற்றி, சுற்றி நடந்து வருவது குறையவே இல்லையாம்.. இப்படி நடந்து கொண்டே இருப்பதால், உணவு உண்ண தரப்படுகின்றவா? தண்ணீர் அருந்துகின்றனவா? ஆடுகள் தூங்குகின்றனவா? இப்படி இடைவெளியே இல்லாமல் சுற்றி கொண்டிருப்பதை பார்த்தால் கவலையாக இருக்கிறதே என்று அக்கறையுடன் கேட்டு வருகிறார்கள்.. ஒருசிலர் இந்த சம்பவத்தை வைத்து, கேலி, கிண்டல் செய்து கமெண்ட்களை போட்டாலும், இதன் பின்னணியில் உள்ள மர்மத்தை அல்லது காரணத்தை உடனடியாக கண்டுபிடித்து, அந்த ஆடுகளை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்..!!

English summary
Amazing video and flock of sheep in mongolia walking in a Clockwise director over 15 days, what happened
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X