For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமேசான் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய கடவுள் பட “லெக்கின்ஸ்” - விற்பனை நிறுத்தம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் பிரபல ஆன் லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ள பெண்களுக்கான லெக்கின்ஸ் ஆடைகளில் கடவுள்களின் உருவம் இடம் பெற்றுள்ளதால் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது உலக அளவில் வசித்து வரும் இந்திய மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசு தலையிட்டு இந்த ஆடைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் அவ்வாடைகளின் விற்பனையை நிறுத்தியுள்ளது.

பெண்களுக்கான ஆடைகள்:

அமெரிக்காவில் பிரபல ஆன் லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். இந்நிறுவனம் பெண்களுக்கான லெக்கின்ஸ் ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

கடவுள்களின் படங்கள்:

அந்த ஆடைகளில் இந்து கடவுள்களான விநாயகர், சிவன், ராமர், கிருஷ்ணர், சரஸ்வதி ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
மேலும் இயேசு புத்தர் படங்களும் உள்ளன.

ஆன்லைன் விற்பனை:

இந்த ஆடைகள் ஆன் லைன் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆடைகள் 48 முதல் 52 டாலர் வரை அதாவது ரூபாய் 3000 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதிருப்தியில் இந்தியர்கள்:

இந்த ஆடைகளை அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனமான ஒய்சாம் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விளம்பரத்தை பார்த்த இந்தியர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

இந்திய அரசுக்கு கோரிக்கை:

அமெரிக்காவில் மட்டுமல்லாமல் உலகளவில் வாழும் இந்தியர்கள் இந்த ஆடைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமேசான் நிறுவனம் இந்த சர்ச்சைக்குரிய ஆடைகளின் விற்பனையை நிறுத்தி வைத்துள்ளது.

English summary
Amazon.com, world's largest online retailer headquartered in Seattle (USA), has removed the women's leggings carrying images of various Hindu gods and goddesses from its website within 24 hours after Hindus protested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X