ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நீர்த்து போன தீர்மானம்.. அடுத்த "ஆயுதத்தை" கையில் எடுக்கும் அமெரிககா?
ஜெனீவா: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா நீர்த்து போக செய்த நிலையில் 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வர வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
Recommended Video
உக்ரைன் மீது ரஷ்யா இன்று 4ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் விமான தளங்கள், ராணுவ தளங்கள், நீர்மின் நிலையங்கள், எண்ணெய் கிணறுகளை துவம்சம் செய்த ரஷ்யா எப்படியாவது தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடிவு செய்து முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் நாஜிக்களை போல மிகவும் ஆக்ரோஷமாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்கி வருவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு போரை நிறுத்துமாறு பல கட்ட முயற்சிகளை எடுத்தன. ஆனாலும் ரஷ்யா கேட்காமல் குறுக்கே யார் வந்தாலும் அவ்வளவுதான் என மிரட்டல் விடுத்துள்ளது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில்
இந்த நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும், உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தன. இந்த கவுன்சிலில் ரஷ்யாவுடன் சேர்த்து மொத்தம் 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

15 உறுப்பு நாடுகள்
இந்த 15 இல் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள், மீதமுள்ள 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாவர். இந்த நிலையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நீர்த்து போக செய்துவிட்டது. வீட்டோ அதிகாரம் கொண்ட ஒரு நாடு அந்த கவுன்சிலில் கொண்டு வரும் தீர்மானத்திற்கு எதிராக ஒரு வாக்கு அளித்தால் கூட அந்த தீர்மானம் மொத்தமும் தோல்வி அடைந்துவிடும்.

193 நாடுகள்
இதற்கு உலக நாடுகள் கண்டனத்தை தெரிவித்தன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் தோல்வி அடைந்ததால் அதே போன்றதொரு தீர்மானத்தை ஐநா சபையில் தாக்கல் செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்துள்ளன. இங்கு மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி அடையும் தீர்மானம் இங்கு கொண்டு வரப்படும்.

வீட்டோ அதிகாரம் இல்லை
அவ்வாறு கொண்டு வரப்படும் தீர்மானத்தின் மீது 50 சதவீதத்திற்கு மேல் ஆதரவு வாக்குகளோ எதிர்ப்பு வாக்குகளோ கிடைத்தால் அதன்படி தீர்மானத்தின் மீதுமுடிவு எடுக்கப்படும். உலக நாடுகள் பெரும்பாலும் ரஷ்யா மீது கடும் கோபத்தில் இருந்து வருவதால் இங்கு கொண்டு வரப்படும் தீர்மானம் வெற்றியடைய வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் இங்கு ரஷ்யாவுக்கு வீட்டோ அதிகாரம் இல்லாததும் எதிர்தரப்பிற்கு ஒரு பிளஸ்ஸாக அமைந்துள்ளது. எனவே விரைவில் ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications