கொரோனா எந்த ரூபத்தில் வந்தாலும்.. நாங்க வேற மாறி! மாஸ்கை கழற்றாமலே சாப்பிடுவோம்.. பரவும் வீடியோ!
பீஜிங்: கொரோனா எத்தனை மாறுபாடு அடைந்தாலும் அதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் நான் சாப்பிடுவதை எந்த வகையிலும் பாதிக்காது என்று சொல்லும் வகையில் ஒருவர் வித்தியாசமான முறையில் மாஸ்க் அணிந்து கொண்டே சாப்பிடும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஜீரோ கோவிட் பாலிசி என்ற பெயரில் மிகக் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து மக்களை திறந்த வெளி சிறைச்சாலையில் அடைத்தது போன்ற கெடுபிடிகளை சீனா விதித்து வந்தது.
இதனால், உலக நாடுகளில் எல்லாம் தினமும் பல்லாயிரக்கணக்கில் கொரோனா பரவி வந்த போது வெறும் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே தங்கள் நாட்டில் கொரோனா பதிவாகி வந்த சொல்லி வந்த சீனா.. தற்போது ஒமிக்ரானின் பிஎப் 7 வகை கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தத்தளித்து வருகிறது.

சீனாவில் வேகமாக பரவும் கொரோனா
கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்ததால் வேறு வழியின்றி முந்தைய ஜிரோ கோவிட் பாலிசியை சீனா தளர்த்தியதாக சொல்லப்படுகிறது. இதனால், தற்போது அந்த நாட்டில் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவிக்கொண்டு இருக்கிறது. இதனால், திரும்பிய பக்கம் எல்லாம் கொரோனா பீதி சீனாவில் நிலவுகிறது. ஒருபக்கம் மருத்துவமனைகளில் ஐசியூ படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இன்னொரு பக்கம் சுடுகாடுகளில் உறவினர்களின் உடல்களை தகனம் செய்ய பெரிய அளவில் மக்கள் திரண்டு இருக்கின்றன.

மாஸ்க்கை கழற்றாமல் சாப்பிட முடியுமா
இந்தக் காட்சிகள் எல்லாம் சர்வ சாதாரணமாக சீனாவில் இருப்பதாகக் கூட சொல்லப்படுகிறது. இத்தனை களேபரத்திற்கு மத்தியிலும் கொரோனாவை அசால்ட் ஆக டீல் செய்யும் செய்வோம் என்று சொல்லும் வகையில், ஒருவர் அணிந்து இருக்கும் வித்தியாசமான கொக்கு வடிவ மாஸ்க் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மாஸ்க் அணிந்த பலரும் சாப்பிடும் போது கட்டாயம் அதை கழற்றியே ஆக வேண்டும். ஆனால், சாப்பிடும் போது கூட மாஸ்க்கை கழற்றாமல் இருக்க வேண்டும் என்று யோசித்து இருக்கிறார்.

கொக்கின் வாய் போன்ற வடிவத்தில்
அப்போதுதான் கொக்கின் வாய் போன்ற வடிவத்தில் மாஸ்க்கை தயார் செய்யும் யோசனை வந்தது போல் தெரிகிறது. இந்த யோசனையை அப்படியே செயல்படுத்திய ஒருவர்.. இந்த மாஸ்க் அணிந்து கொண்டு உணவு விடுதி ஒன்றில் சாவகாசமாக தனது உணவை ருசித்து சாப்பிடும் வீடியோ ஒன்று ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த நபரின் புதுமையான யோசனையை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

சாப்பாட்டு பிரியராகத்தான் இருக்க வேண்டும்
சபிர் என்பவர் தனது ட்விட்டரில் அந்த வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். 17 நொடிகள் ஓடும் இந்த வீடியோ சில மணி நேரங்களில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை சுவாரசியமாக பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு மாஸ்க் எங்கு கிடைக்கும் என்று சில நெட்டிசன்கள் பதிவிட்டு இருக்கின்றனர். சில நெட்டிசன்களோ, கண்டிப்பாக இவர் சாப்பாட்டு பிரியராகத்தான் இருக்க வேண்டும் அதனால்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு பேப்பரில் இப்படி ஒரு மாஸ்க்கை தயாரித்து இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications