"ரத்த ஆறு.." அண்டார்டிக்காவில் பீறிட்டு கொட்டும் சிவப்பு கலர் நதி.. மர்மத்தை அவிழ்த்த ஆய்வாளர்கள்
அண்டார்டிகா: எங்குத் திரும்பினாலும் வெள்ளை நிறம் இருக்கும் அண்டார்டிகா "டெய்லர்" பனிக்கட்டிகள் என்ற இடத்தில் மட்டும் திடீரென சிவப்பு நிறம் பீறிட்டுக் கொட்டுகிறது. இதற்கு என்ன காரணம் என புரியாமல் ஆய்வாளர்கள் குழம்பிப் போய் இருந்த நிலையில், இதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
நம்மில் அனைவருக்கும் அண்டார்டிகா என்றதும் அங்குள்ள வெள்ளை நிற பனிக்கட்டிகள் தான் நினைவுக்கு வரும். எங்குப் பார்த்தாலும் இதுபோல வெள்ளை கலர் பனிக்கட்டிகளே இருக்கும். ஆனால், இப்படி எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறம் படர்ந்து இருக்கும் அண்டார்டிகாவில் ஒரு இடத்தில் மட்டும் ரத்தத்தை போலச் சிவப்பு கலரில் அருவி பீறிட்டுத் தெறிக்கிறது.

மர்ம சிவப்பு நீர் ஊற்று
நீண்ட காலமாகவே ஏன் இப்படி நடக்கிறது என்பதில் தெளிவு இல்லாத ஒரு சூழல் இருந்தது. இதற்கிடையே மர்மமான சிவப்பு நீர் ஊற்றுக்கும், அதன் பின்னால் ஏற்படும் மாற்றங்கள் என்ன என்பதற்கான விடையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அண்டார்டிக்காவில் உள்ள மெக்மர்டோ ட்ரை வேலீஸ் பகுதியில் டெய்லர் பனிக்கட்டிகள் முன்பு தான் இந்த வினோதம் நடக்கிறது.
என்ன காரணம்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இது ஆய்வாளர்களைக் குழப்பி வந்தது. நியூஸ்வீக் தகவல்படி, 1911இல் ஆஸ்திரேலியப் புவியியலாளர் தாமஸ் கிரிஃபித் டெய்லர் டெர்ரா நோவா ஆய்வின்போது இதனை முதன்முதலில் பதிவு செய்தார். இதற்கான விடை இப்போது கிடைத்துள்ளது. அதாவது பனியாறுக்கு அடியில் இருந்து அவ்வப்போது வெளிவரும் இரும்புச்சத்து மிகுந்த உப்பு நீரே (brine) ரத்த அருவியின் தோற்றத்திற்குக் காரணம் என ஆய்வாளர்கள் விளக்கினர்.
பனிக்கட்டிகளின் எடை மற்றும் இயக்கம் இந்த நீரை மேற்பரப்புக்குக் கொண்டுவந்து, ஆக்சிஜனேற்றம் அடைந்து சிவப்பு நிறமாகிறது. பின்னர், இது பனியால் மூடப்பட்ட லேக் போனியின் மேற்குப் பகுதியை நோக்கிப் பாய்கிறது. இது கறையாக மட்டுமல்லாமல், பனியாறுக்கு அடியிலான அழுத்த மற்றும் நீர் இயக்க மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகிறது.
ஆய்வு
பனிக்கட்டிகளின் மேற்பரப்பு குறைவதற்கும், உப்புநீர் வெளியேற்றத்தால் ஏற்படும் அழுத்தக் குறைவுக்கும் தொடர்பை ஆய்வின் முதன்மை ஆசிரியர் பீட்டர் டி. டோரன் விளக்கினார். பல வாரங்களாக, டோரன் குழுவினர் பனியாறின் மேற்பரப்பு கீழிறங்கி உயர்வதையும், பனிக்கு அடியில் நீர் வெளியேறுவதையும் கண்காணித்தனர். 2018 செப்டம்பரில், இந்தச் சிவப்பு கலர் நீர் கொட்டும் டெய்லர் பனிக்கட்டிகளில் ஜிபிஎஸ் டிராக்கர், ரத்த அருவிக்கு டைம்-லேப்ஸ் கேமரா, லேக் போனியில் தெர்மிஸ்டர் கொண்டு ஆய்வாளர்கள் டேட்டாவை சேகரித்தனர்.
தக்க வைக்க முடியவில்லை
அப்போது தான் 2018ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி சிவப்பு கறை உருவாகிப் பரவியது கேமரா பதிவானது. மேலும், வெளியேற்றத்தின்போது ஏரியில் நீர் ஆழம் குறைந்ததை தெர்மிஸ்டர் உறுதிப்படுத்தியது. கனமான பனிக்குக் கீழ் உப்பு நீர் சிக்கி அழுத்தம் அதிகமாகும்போது, பனியாறால் அதைத் தக்கவைக்க முடிவதில்லை. அவை தான் பனி அசையும்போது ஏற்படும் சிறிய விரிசல்களில் பீறிட்டு திடீர் பாய்ச்சலாக வெளிப்படுத்துகின்றன.
இந்த நிகழ்வில் பனிக்கட்டியின் மேற்பரப்பு 0.6 அங்குலம் குறைந்து, முன்னோக்கிய இயக்கம் சுமார் 10 சதவீதம் மெதுவாகியதாக ஆய்வு கண்டறிந்தது. டெய்லர் பனிக்கட்டி அடியில் இருந்து சுமார் ஒரு மாத காலமாக ஏற்பட்ட உப்புநீர் வெளியேற்றத்தால் துணைப் பனியாறு நீர் அழுத்தம் குறைந்து என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications