For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்கப்பல் கேட்டிருப்பீங்க.. தங்க நாக்கு தெரியுமா.. எகிப்தில் மம்மி வைத்திருந்த தங்க நாக்கு!

Google Oneindia Tamil News

கைரோ: எகிப்தில் நடத்தப்பட்ட ஒரு தொல்லியல் ஆய்வில் தங்க நாக்குடன் கூடிய மம்மி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

தபோசிரிஸ் மாக்னா எனும் இடத்தில் சான்டோ டொமிங்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் அகழாய்வில் ஈடுபட்டனர். காத்லீன் மார்டினீஸ் தலைமையிலான குழு அந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அவற்றுடன் வெட்டப்பட்ட பாறையில் அமைக்கப்பட்ட 16 கல்லறைகளை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுடன், தங்க நாக்குடன் கூடிய மம்மி ஒன்றையும் கண்டுபிடித்தனர்.

ரோம்

ரோம்

சும்மா 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய மம்மி என கண்டுபிடித்துள்ள அவர்கள் தங்க நாக்கு எதற்காக வைக்கப்பட்டிருக்கும் என்பது குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் ரோம் மற்றும் கிரேக்க கலாச்சாரம் நிலவி வந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆவிகள்

ஆவிகள்

இறந்த பிறகு பாதாள உலகத்துக்கு செல்லும் ஆவிகளை ஒசிரிஸ் வகைப்படுத்தும் என்பது அந்த பகுதி மக்களின் நம்பிக்கையாக இருந்தது. அதிலும் தங்க நாக்குடன் புதைக்கப்படுபவர்கள் தங்களின் இறப்புக்கு பிறகு ஒசிரிஸுடன் நேரடியாக பேச முடியும் என நம்பிக்கை வைத்திருந்தனர்.

கல்லறைகள்

கல்லறைகள்

இதன் அடிப்படையிலேயே கண்டெடுக்கப்பட்ட மம்மியும் ஓசிரிஸ் மீது நம்பிக்கை கொண்டதாக இருந்திருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ராணி கிளியோபாட்ராவும் ஒசிரிஸ் நம்பிக்கை கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவருடைய ஆட்சிக் காலத்தில்தான் வெட்டப்பட்ட பாறை கல்லறைகளில் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டனர்.

ஒசிரிஸ் என்றால் என்ன?

ஒசிரிஸ் என்றால் என்ன?

எகிப்தின் மெடிடெரேனியன் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒசிரிஸ் என்றால் பழங்கால எகிப்தியர்களின் இறப்புக்கான கடவுள். சில மம்மிகளில் இரு தங்க நாக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக எகிப்திய செய்தித்தாள் கூறியுள்ளது.

English summary
Archaeologists finds a mummy with a golden tongue in outskirts of Alexandria Egypt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X