For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சைப்ரஸில் இருந்து பெய்ரூட் கிளம்பிய பயிற்சி விமானம் கடலில் விழுந்து விபத்து

By Siva
Google Oneindia Tamil News

நிகோசியா: 2 பேருடன் சைப்ரஸில் இருந்து பெய்ரூட் சென்ற சிறிய ரக விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

சிறிய ரக விமானம் ஒன்று சைப்ரஸில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு கிளம்பியது. விமானத்தை லெபனானைச் சேர்ந்தவர் ஓட்டினார். அதில் சைப்ரஸைச் சேர்ந்த நபர் ஒருவர் இருந்தார். அவர்கள் விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் மாயமானது. அதை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை. விமானம் ஏன் மாயமானது என்று தெரியவில்லை.

இந்நிலையில் இது குறித்து லெபனான் உள்துறை அமைச்சர் நுஹாக் எல் மஷ்நௌக் கூறுகையில்,

சைப்ரஸில் இருந்து கிளம்பிய விமானம் லெபனான் கடற்கரையில் இருந்து 100கிமீ தொலைவில் விபத்துக்குள்ளாகி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்தவர்கள் பலியாகியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

English summary
A small Beirut bound plane carrying two people crashed into sea after taking off from Cyprus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X