For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸெல்லாம் மனபிராந்தி.. வோட்கா குடிப்போம்.. வைரஸை கொல்வோம்.. சொல்வது ஒரு நாட்டின் அதிபர்

Google Oneindia Tamil News

மின்ஸ்க்: கொரோனா வைரஸ் ஒரு மனநோய். எந்த மருந்தும் உட்கொள்ளாமலேயே கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தேன் என பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர் லுகான்சேன்கோ தெரிவித்துள்ளார்.

உலகளவில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. 1.6 கோடி பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த பாதிப்பிலிருந்து மீள மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

அத்துடன் நோய் அண்டாமல் இருக்க பல்வேறு மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நோய்க்கு தடுப்பு மருந்தை ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கண்டுபிடித்துவிட்டதாக சொல்லப்படுகின்றன.

இன்னும் 2 வாரம்.. ரஷ்யாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசி ரெடி.. முதலில் டாக்டர்களுக்கு செலுத்தப்படும் இன்னும் 2 வாரம்.. ரஷ்யாவில் தயாராகும் கொரோனா தடுப்பூசி ரெடி.. முதலில் டாக்டர்களுக்கு செலுத்தப்படும்

மருந்து

மருந்து

எனினும் அவற்றை உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்தால் மட்டுமே அந்த மருந்தை பயன்படுத்த முடியும். இந்த நிலையில் 9.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பெலாரஸ் நாட்டில் இதுவரை கொரோனாவால் 67,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் 543 பேர் பலியாகிவிட்டனர். 61,442 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து மீண்டுள்ளனர்.

பெலாரஸ் நாட்டு அதிபர்

பெலாரஸ் நாட்டு அதிபர்

இந்த நிலையில் பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்ஸாண்டர் லுகான்சேன்கோவும் அறிகுறிகளே இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமடைந்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் இப்போது கொரோனா தொற்றிலிருந்து எவ்வித மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு மருந்து உட்கொள்ளாமலேயே மீண்டு வந்துள்ளேன்.

97 சதவீதம்

97 சதவீதம்

மருத்துவர்கள் இது அறிகுறியற்ற நோய் என்று கூறுகிறார்கள். நம் நாட்டில் 97 சதவீதம் பேர் அறிகுறி இல்லாமலேயே இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால் நாம் கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இந்த நோய் ஒரு மன நோய்தான். அதனால் வோட்கா குடித்தபடி கொரோனாவை விரட்டிவிடுங்கள் என தைரியம் அளிப்பதாக நினைத்து தவறான தகவலை தெரிவித்துள்ளார் அதிபர்.

சந்திப்புகள்

சந்திப்புகள்

1994 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டின் அதிபர் லுகாசேன்கோதான். உலக நாடுகளே கொரோனா பாதிப்பில் முடங்கிக் கிடக்கும் நிலையில் மே மாதம் ராணுவ அணிவகுப்பை நடத்தினார். நெருக்கடியான காலகட்டத்திலும் தொடர்ந்து அரசு பணிகள், சந்திப்புகளை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய வைரஸ்

சிறிய வைரஸ்

இவரை போல் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனேரோவும் கொரோனா ஒரு சிறிய வைரஸ், எனது உடல் வீரனுடையது. இதில் இந்த சிறிய வைரஸ் என்ன செய்யும் என கேட்டு பொதுவெளியில் மாஸ்க் இல்லாமல் கலந்து கொண்டார். கட்டி அணைப்பது, கைகுலுக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டிருந்தார்.

English summary
Belarus President says that Corona virus is Psychosis. so drink Vodka to kill the deadly virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X