வேகமாக கார் பார்க்கிங்கில் தரையிறங்கிய விமானம்.. கலிபோர்னியாவில் நடந்த வித்தியாசமான விபத்து
கலிபோர்னியாவில் உள்ள மால் ஒன்றில், விமானம் ஒன்று விழுந்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது.
Recommended Video

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் உள்ள மால் ஒன்றில், விமானம் ஒன்று விழுந்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது. மாலின் கார் பார்க்கிங் பகுதியில் விமானம் தரையிறங்கி உள்ளது.
இந்த வருடம் விமானம் விபத்திற்கான வருடம் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு உலகம் முழுக்க விமான விபத்துகள் தினமும் நடக்கிறது. நேற்றும் அமெரிக்காவில் வித்தியாசமான விமான விபத்து ஒன்று நடந்துள்ளது.
கலிபோர்னியாவின் சான்டா அனா பகுதியில் உள்ள சவுத் கோஸ்ட் பிளாசா மாலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேகமாக மோதியது
மக்கள் அந்த மாலின் உள்ளே பொருட்கள் வாங்கி கொண்டிருக்குக்கும் போதே, விமானம் நேரடியாக உள்ளே வந்து வேகமாக தரையிறங்கி இருக்கிறது. அங்கு கீழ் இருந்த கார் பார்க்கிங் பகுதியில் விமானம் இறங்கியுள்ளது. வேகமாக மோதியதில் மாலின் சில பகுதிகள் இடிந்து தரைமட்டமாகி விழுந்தது.

பலி எண்ணிக்கை
இந்த சம்பவத்தால் விமானத்தில் இருந்த 5 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் ஒருவர் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மாலில் இருந்த நபர்களுக்கு எதாவது காயம் ஏற்பட்டு இருக்கிறதா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. 3 கார் மோசமாக சேதம் அடைந்துள்ளது.

காரணம் என்ன
அந்த சிறிய விமானம் பறந்து செல்லும் போதே எதோ பிரச்சனை ஒன்று ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க அந்த மாலுக்கு அருகில் உள்ள, விமான நிலையம் ஒன்றில் அனுமதி வாங்கி இருக்கிறார்கள். ஆனால் விமானம் தரையிறக்கப்படும் முன், மாலில் உள்ள பார்க்கிங் பகுதியில் மோதி இருக்கிறது.

விசாரணை நடக்கிறது
தற்போது இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. விபத்திற்கு உண்மையான காரணம் என்ன, விமானம் செயல் இழந்தது எப்படி என்று விசாரிக்கப்படுகிறது. அதேபோல் மருத்துவமனையில் இருக்கும் நபர் சுயநினைவு அடைந்த பின் அவரிடம் விசாரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications