துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் நடந்த இந்திய குடியரசு தின ரத்ததான முகாம்
துபாய்: துபாய் ஈமான் கலாச்சார மையம் இந்தியாவின் 67-வது குடியரசு தின விழாவையொட்டி சிறப்பு ரத்ததான முகாமை 15.01.2016 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு
சோனாப்பூர் அல் நஜ்மா அல் பரிதா தொழிலாளர் முகாமில் நடத்தியது.

இந்த ரத்ததான முகாமிற்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். அல் நஜ்மா அல் பரிதா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜமால் முகம்மது அப்துல் கலாம் முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ரத்ததான முகாமில் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர். முகாமிற்கான வசதிகளை சிறப்புடன் செய்து கொடுத்த அல் நஜ்மா அல் பரிதா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜமால் முகம்மது அப்துல் கலாமுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா நினைவுப் பரிசை

வழங்கி கௌரவித்தார். மேலாளர் ஜமால் ஹாஜாவுக்கு ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் பூங்கொத்து கொடுத்து கௌரவித்தார். ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தலைமையில் முதுவை ஹிதாயத், ஹமீது யாசின், பைசுர் ரஹ்மான், கூத்தாநல்லூர் ஹிதாயத்துல்லா, அபுதாகிர், அஞ்சுகோட்டை அப்துல் ரசாக், காதர் மொகிதீன், யாக்கூப், மொகிதின், ஜாபர் சித்தீக், தமீம் அன்சாரி, காயல் வாஹித், படேஷா பஷீர், காயல் ஈசா உள்ளிட்டோர் சிறப்புடன் செய்திருந்தனர்.

தமிழ் ஆர்வலர் விஜயராகவனின் புதல்விகள் ரத்ததானம் செய்தவர்களுக்கான சான்றிதழ்களை அழகிய கையெழுத்தில் எழுதி கொடுக்கும் பணியினை மேற்கொண்டனர்.

அல் நஜ்மா அல் பரிதா நிறுவனத்தின் சார்பில் ரத்ததானம் செயதவர்களுக்கு வேண்டிய பழங்கள் மற்றும் ஜூஸ் வழங்கும் ஏற்பாடுகளை மேலாளர் அபுதாகிர், சதாம், ராஜவேல் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற அல் ரவாபி நிறுவனம், பிளாக் துலிப் பிளவர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அணுசரனை வழங்கியிருந்தன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications