அசத்தல்.. கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் ரத்தத்தில் இருந்து மருந்து.. சீனாவிலிருந்து குட்நியூஸ்?
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவர்கள் உடலில் அவற்றுக்கு எதிராக வளர்ந்திருக்கும் பிளாஸ்மா மற்றவர்களை குணப்படுத்த உதவிகரமாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
Recommended Video
இதேபோன்ற சிகிச்சை நடைமுறையை, சீன மருத்துவர்கள் கையில் எடுத்துள்ளனர். இதை சோதித்து பார்க்க அமெரிக்க மருத்துவர்களும், அந்த நாட்டு நாட்டு மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது மிகப் பழங்காலம் நடைமுறைதான் என்றும், பல்வேறு தொற்று நோய்களுக்கு சிகிச்சை தர இந்தமுறை வெகுவாக பயன்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள் வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவர்கள்.

ஆன்டிபாடிகள் உருவாகின
இந்த முறையில், கொரோனாவை குணப்படுத்த எந்த அளவுக்கு சாத்தியம் என்பது பரிசோதனைகளுக்குப் பின் தெரியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட கிருமியால் பாதிக்கப்படுகையில், உடல் அந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட ஆன்டிபாடிகள் எனப்படும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட புரதங்களை உருவாக்கத் தொடங்குகிறது. அந்த நபர் குணமடைந்த பிறகு, அந்த ஆன்டிபாடிகள் உயிர் பிழைத்தவர்களின் ரத்தத்தில் மிதக்கின்றன. குறிப்பாக பிளாஸ்மா எனப்படும் இரத்தத்தின் திரவ பகுதியில் பல மாதங்கள், சில நேரங்களில் பல ஆண்டுகள் கூட உயிர் வாழ்கின்றன.

கொரோனா குணமடையுமா
புதிதாக நோய்வாய்ப்பட்ட COVID-19 நோயாளிகளுக்கு ஏற்கனவே, உயிர் பிழைத்தவர்களின் ஆன்டிபாடி நிறைந்த பிளாஸ்மாவை உட்செலுத்தி சிகிச்சை வழங்கினால் கொரோனா குணமடையுமா என்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவி வரும் நிலையில் இதுபோன்ற செய்திகள் சற்று நம்பிக்கை தரும் வகையில் உள்ளன.

வரலாறு
1918 ப்ளூ காய்ச்சல் தொற்றின்போது, தட்டம்மை மற்றும் பாக்டீரியா நிமோனியா உள்ளிட்ட ஏராளமான பிற தொற்றுகளுக்கு எதிராக மிகவும் பிரபலமானதாக இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டன. சமீபகாலத்தில், எபலோ, சார்ஸ் போன்ற நோய்களுக்கு எதிராகவும், இதுபோன்ற சிகிச்சை முறை பலனை அளித்தது.

நல்ல நடைமுறை
இது "கற்காலத்திற்குத் திரும்புவது" போல் தோன்றலாம், ஆனால் தப்பிப்பிழைத்தவர்களின் ரத்தத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதற்கு நல்ல அறிவியல் காரணம் இருக்கிறது என்று செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் டாக்டர் ஜெஃப்ரி ஹென்டர்சன் கூறுகிறார். ஒரு எச்சரிக்கையும் இதில் உள்ளது. வழக்கமான பிளாஸ்மா மாற்றங்கள் மருத்துவத்தில் முக்கிய இடம் பிடித்தாலும், அவை மிகவும் அரிதாக நுரையீரல் பாதிப்பை பக்க விளைவாக ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications