ஓய்வூதிய திட்ட சீர்திருத்தங்களை எதிர்த்து வலுக்கும் போராட்டம்: பின்னடைவை சந்திக்கிறதா பிரேசில்?

Posted By: BBC Tamil
Subscribe to Oneindia Tamil

பிரேசிலில் நாட்டின் ஓய்வூதிய திட்ட அமைப்பில் அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ள சீர்திருத்தங்களை எதிர்த்து நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

ஓய்வூதிய திட்ட சீர்திருத்தங்களை எதிர்த்து பிரேசிலில் வலுக்கும் போராட்டம்
AP
ஓய்வூதிய திட்ட சீர்திருத்தங்களை எதிர்த்து பிரேசிலில் வலுக்கும் போராட்டம்

நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் நிதி அமைச்சகத்தை ஆக்கிரமித்து நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள அதே வேளையில், சாவ் பவுலோவில் ஆர்ப்பாட்டக்காரார்கள் நகர போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்துள்ளனர்.

ஓய்வூதிய நலன்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தது மற்றும் ஒய்வு பெறும் வயதை அதிகரித்தது ஆகியவை, நாட்டின் பொருளாதார சிரமங்களை சரிசெய்ய தேவைப்படும் நடவடிக்கைகள் என்று பிரேசில் அதிபர் மைக்கேல் டெமர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலகட்டத்தில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார தேக்கநிலையை பிரேசில் தற்போது சந்தித்துள்ளது.

BBC Tamil
English summary
Tens of thousands of people have taken part in protests across Brazil against planned reforms to the pension system.
Please Wait while comments are loading...